மோடி ஒரு யோகி.. நாட்டு மக்கள் நன்றாக வாழ உழைக்கிறார்.. பாரிவேந்தர் புகழாரம்
Parivendhar Campaign : திருச்சி மாவட்டம் வாளசிராமணி பகுதியில் பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார்.
Parivendhar IJK Campaign : மோடி ஒரு யோகி எனவும், நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென உழைத்து கொண்டிருப்பதாகவும், பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் வாளசிராமணி பகுதியில் பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், தான் செய்த பணிகள் குறித்து Progress Report போல தொகுதி மக்களுக்கு புத்தகமாக வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த புத்தகத்தை நீங்கள் படித்தீர்களானால் தனக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் போடுவீர்கள் என கூறினார். எம்.பி தொகுதி நிதியான 17 கோடி ரூபாயில் 42 வகுப்பறைகள்,
சமூக கூடங்கள், ரேசன் கடை, உள்ளிட்டவை கட்டி கொடுத்து உள்ளதாக கூறினார். தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என குற்றஞ்சாட்டினார். மோடி ஒரு யோகி என்றும் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென அவர் உழைத்து கொண்டிருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து வேலம்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தருக்கு, கிராம மக்கள் திரளாகக்கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தான் எம்.பி ஆனால் ஆயிரத்து 500 ஏழைக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். மோடி, நாட்டு மக்கள் வறுமையில் இருக்க கூடாது என்பதற்காக உழைத்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தான் வெற்றி பெற்று வரும்போது நிச்சயமாக உங்கள் ஊர் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.
தொடர்ந்து ஊரக்கரை பகுதியில் ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தருக்கு, அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாக்குறுதிகளைத் தெரிவித்து அவர் வாக்கு சேகரித்தார். தா.பேட்டை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அரியலூர் வழியாக நாமக்கல்லுக்கு நிச்சயமாக ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
இத்திட்டம் நிறைவேறினால் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும், இத்திட்டம் வந்தால் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறும் எனவும் குறிப்பிட்டார். தேர்தலில் ஊழல் செய்யாதவர்களாக, லஞ்சம் வாங்காத நல்லவர்களை, தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திமுகவினர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி மக்களை ஏமாற்றி, குழப்பி விடுவதாக குற்றஞ்சாட்டினார். விவேகானந்தர் போன்றவர் மோடி எனவும், நாட்டு மக்கள் கஷ்டப்படகூடாது என இரவு பகலாக உழைத்து கொண்டு இருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் பிரசாரம் செய்த டாக்டர் பாரிவேந்தருக்கு வானவேடிக்கை முழங்க தேசிய ஜனநாயக கூட்டணியினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அப்போது பேசிய அவர், 2019 வாக்குறுதியின்படி 118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாகக் குறிப்பிட்டார். தான் மீண்டும் எம்பி ஆனால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். தமிழகத்தில் ஊழல் தலை விரித்தாடுவதாகவும், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பி, மோடியின் கரத்தை வலுப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தினார்.
மக்களுக்கு, தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட ஒரு துணிவு வேண்டும் என பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டையூர் பகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து பேசிய டாக்டர் பாரிவேந்தர், பிரதமர் மோடி தூய்மையான ஆட்சியை கொடுத்துள்ளதாகவும், உலக நாடுகள் அவரை பெருமை கொள்வதாகவும் புகழாரம் சூட்டினார். மேலும் தமிழ்நாட்டில் எல்லா அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டை ஆளும் கட்சி ஊழலில் அதிகமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில், தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறு புத்தகத்தை வெளியிட ஒரு துணிவு வேண்டும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கோணப்பாதை கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு பேசிய அவர், கல்விக்கான தெய்வம் சரஸ்வதி என்றும், அதற்காக தாமரையை மறந்துவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். சுட்டெரிக்கும் சூரியனை மறந்துவிட வேண்டும் என்றும் கூறினார். மேலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை என அறிவுறுத்திய டாக்டர் பாரிவேந்தர், அனைவரும் வரும் 19-ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
திருச்சி மாவட்டம் சிக்கத்பூர் பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர். பாரிவேந்தர், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியினர் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைதொடர்ந்து பேசிய அவர், ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக்கி, அவர்கள் குடும்பங்களில் விளக்கேற்றி உள்ளதாகக் கூறினார். பிரதமர் மோடி வந்த பிறகு இந்தியாவின் பெயரும், பெருமையும் அதிகரித்து உள்ளதாகவும், நல்லவர்களை MPயாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் ஊழல் கட்சிதான் இன்று தமிழ்நாட்டை ஆள்கிறது எனவும், ஊழல் கட்சியிலிருந்து வருபவர்கள் ஊழல் வாதிகள் எனவும் விமர்சித்தார். இதையடுத்து தன்னை வெற்றி பெறச் செய்தால் சிக்கதம்பூர் கிராமத்தில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், மாவீரன் சுந்தரலிங்கத்திற்கு சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.