UGC NET Registration: யுஜிசி நெட் தேர்வுக்கு தயாரா? விண்ணப்பிப்பது எப்படி? கட்டணம் எவ்வளவு - முழு விபரம்
UGC NET December 2023 Registration: யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், தேர்வு எழுத விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், தேர்வு எழுத விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசித் தேதி ஆகும்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor) ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத அமர்வுக்கான யுஜிசி தேசியத் தகுதித் தேர்வு டிசம்பர் 6 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் மாணவர்கள் தங்களின் அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. மாணவர்கள் அக்டோபர் 30 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ.1,150 தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், ஓபிசி க்ரீமி லேயர் அல்லாதோர் 60 ரூபாயைச் செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளி / மூன்றாம் பாலின மாணவர்கள் ரூ.325 கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது.
இதையும் வாசிக்கலாம்: TET Teachers: தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் போட்டி; அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் - டெட் ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
UGC NET December 2023 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் ugcnet.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம் ஆகும்.
* முகப்புப் பக்கத்தில் UGC NET December 2023 Registration open - Click Here என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* புதிதாக ஒரு பக்கம் தோன்றும். அதில் பதிவு செய்து, கேட்கப்படும் தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.
* தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
* அதேபோல தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களை முழுமையாகக் காண https://ugcnet.nta.ac.in/images/public-notice-ugc-net-december-2023-for-application.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
தேர்வர்கள் இ- மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
கூடுதல் தகவல்களுக்கு https://ugcnet.nta.ac.in/
இதையும் வாசிக்கலாம்: MoE Guidelines: மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம், தற்கொலைகள்... தடுப்பது எப்படி? - மத்திய அரசு வழிகாட்டல்!