மேலும் அறிய

TET Teachers: தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் போட்டி; அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் - டெட் ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகாவது நல்லாட்சி செய்ய வேண்டும். நாங்கள் போட்டியிட்டால்தான் உங்கள் ஆட்சியின் அவலம் புரியும்.

மாநிலம் முழுவதும்  திமுக அரசால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை வேட்பாளர்களாக நிறுத்த உள்ளோம் என்று டெட் ஆசிரியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன்னர் தேர்தல் வாக்குறுதிகளாக, டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவது ரத்து செய்யப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. எனினும் இந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 

மேற்குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3  கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மூவர் அடங்கிய குழு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

ஆசிரியர்கள் திடீரென கைது

எனினும் அரசின் அறிவிப்பில் திருப்தி இல்லை என்றுகூறி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் திடீரென  இன்று அதிகாலை, ஆசிரியர்களைக் காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக டெட் ஆசிரியர்கள் சங்கத்தினரும் அறிவித்துள்ளனர். 

மாநிலம் முழுவதும் போட்டி

இதுகுறித்து டெட் ஆசிரியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’மாநிலம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக அரசால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை வேட்பாளர்களாக நிறுத்த உள்ளோம். ஆசிரியர்களுடன் அரசு ஊழியர்கள், செவிலியர்களும் தேர்தலில் நிற்க உள்ளனர். மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்கும் நீங்கள்தான் ஆட்சி நடத்தப் போகிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகாவது நல்லாட்சி செய்ய வேண்டும்.

நாங்கள் போட்டியிட்டால்தான் உங்கள் ஆட்சியின் அவலம் புரியும். நாங்களும் அரசியல் குடும்பத்தில் இருந்து ஆசிரியர்கள் ஆனவர்கள்தான். சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்குள் நல்ல முடிவைச் சொல்ல வேண்டும் என்று கெடு அளிக்கிறோம். போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப்பெறுகிறோம். கோரிக்கை நிறைவேறவில்லை எனில் மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மிகவும் தீவிரமான போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்று இளங்கோவன் தெரிவித்தார். 

தற்போது இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Embed widget