UGC: ஆன்லைன், திறந்தநிலை, தொலைதூர படிப்புகளுக்கு புது நடைமுறை; யுசிஜி அறிமுகம்
UGC New Enrollment Procedure: அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்வதை உறுதிசெய்யும் வகையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் வழிப் படிப்புகள், திறந்தநிலை, தொலைதூர படிப்புகளில் சேர புது நடைமுறையை யுசிஜி அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
2024- 25ஆம் கல்வி ஆண்டில் இருந்து திறந்தநிலை மற்றும் தொலைதூர படிப்புகள் (ODL) மற்றும் ஆன்லைன் படிப்புகளில் (Online Programmes) சேர, புதிய மாணவர் சேர்க்கை நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பர் 2024 முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.
எதற்காக இந்த நடைமுறை?
அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்வதை உறுதிசெய்யும் வகையிலும் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்யவும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
யுஜிசி (ODL Programmes and Online Programmes) Regulations, 2020 சட்ட விதிகளின்படி, யுஜிசி தொலைதூரக் கல்விக்கான இணையதளத்தில் அங்கீகரிக்கபட்ட நிறுவனங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத நிறுவனங்கள் பல, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டது பிரச்சினையான நிலையில், இந்த நடவடிக்கை அவசியம் ஆகிறது.
UGC- DEB தளத்தில் மாணவர்கள் முன்பதிவு கட்டாயம்
இந்த ஆண்டில் இருந்து ஓடிஎல், ஆன்லைன் படிப்புகளில் சேர, UGC- DEB தளத்தில் மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். ஏபிசி எனப்படும் தனிப்பட்ட Academic Bank of Credit ஐடி மூலம், DEB ID உருவாக்கப்படும். ஓடிஎல், ஆன்லைன் படிப்புகளில் சேர இந்த ஐ.டி. கட்டாயம் ஆகும். எனினும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இது தேவையில்லை.
வாழ்நாள் முழுவதும் இந்த DEB ID செல்லுபடியாகும். இந்த புதிய நடைமுறை சேர்க்கை குறித்து, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://deb.ugc.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு; ஏன்?- தமிழக பாடநூல் கழகம் பதில்