மேலும் அறிய

தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!

திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் படி 11,773 பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், கடந்த 2021 தேர்தலின் போது திமுக அளித்த 181-வது வாக்குறுதியான 'பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம்' இதுவரை நிறைவேற்றப்படாதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் விடுத்துள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நிறைவேற்றப்படாத 181-வது வாக்குறுதி

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக அறிவித்திருந்தது. முன்னதாக 2016 தேர்தலிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தாதது 11,773 ஆசிரியர்களின் குடும்பங்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிதியொதுக்கீடு கோரிக்கை

தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்திற்காக ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவர்களுக்குக் காலமுறை ஊதியமாக 20,600 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்க வேண்டுமானால், ஆண்டுக்குத் தோராயமாக 450 கோடி ரூபாய் தேவைப்படும். அதாவது, தற்போதைய செலவை விடக் கூடுதலாக 250 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.

பெண்களின் வாழ்வாதாரத்திற்காக 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்கு ஒரே நாளில் 6,550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் முதல்வர், 15 ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியாளர்களாகத் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்காக இந்தச் சிறிய தொகையான 250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஏமாற்றமளிக்கும் அரசாணைகள்

சமீபத்தில் 03.03.2026 அன்று வெளியான அரசாணையில், சம்பள உயர்வு 2,500 ரூபாய் மற்றும் மே மாதத்திற்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கப் போகும் 15,000 ரூபாய் புதிய சம்பளம், இன்றைய உச்சகட்ட விலைவாசி உயர்வில் ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடப் போதாது.

"பணிநிரந்தரம் செய்வார் என நம்பியிருந்த எங்களுக்கு, வெறும் சம்பள உயர்வை மட்டும் வழங்கி கண்துடைப்பு செய்வதை ஏற்க முடியாது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது 'சிறப்பு மதிப்பெண்' வழங்கப்படும் என மடைமாற்றம் செய்வதைக் கைவிட்டு, திமுக தனது தேர்தல் வாக்குறுதிப்படி நேரடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்புத் தேர்வு நடத்தக்கூட அரசுக்கு ஏன் மனமில்லை?" எனவும் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடனடி நடவடிக்கை தேவை

2012-ஆம் ஆண்டு வெறும் 5,000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்த இந்த ஆசிரியர்கள், தற்போது 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டனர். இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த மார்ச் மாதத்திற்கு மட்டுமாவது கூடுதலாகத் தேவைப்படும் 20 கோடி ரூபாய் நிதியை உடனடியாக ஒதுக்கி, காலமுறை ஊதியத்திற்கான அரசாணையைப் போர்க்கால அடிப்படையில் வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, தங்களுக்கு அளித்த ஆசைவார்த்தைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் 12,000 குடும்பங்களின் வாழ்வாதாரப் போராட்டம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget