TNPSC Group 4: குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு; தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC Group 4 Certificate Verification: குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்க, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய 10 வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக தேர்வு முடிவுகள் நேற்று (அக்.28) மதியம் வெளியாகின.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத 20,37,101 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில், 4,45,345 பேர் தேர்வை எழுதவில்லை.
16 லட்சம் பேர் எழுதிய தேர்வு
தேர்வை 15,91,429 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களில் அதி விரைவாக வெளியிடப்பட்டன. நேற்று அதாவது அக்டோபர் 28ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது.
— TNPSC (@TNPSC_Office) October 29, 2024
இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்க, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய 10 வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தேர்வர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/
இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 4 Result 2024: வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்; 2 வழிகளில் காணலாம்- எப்படி?