மேலும் அறிய

TNPSC Group 4: இன்றே கடைசி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்!- எப்படி?

TNPSC Group 4 Exam Application Correction: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கான 6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான, விண்ணப்பங்களை சரிபார்க்க இன்றே (மார்ச் 6) கடைசி ஆகும். 

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கான  6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு பிப்ரவரி 28ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பங்களை சரிபார்க்க இன்றே (மார்ச் 6) கடைசி ஆகும். 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான இடங்களும் இதிலேயே சேர்க்கப்பட்டுள்ளன. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம். 

தொடர் தாமதத்துக்குப் பிறகு தேர்வு முடிவுகள்

இதற்கிடையே 2022ஆம் ஆண்டு பல்வேறு கட்ட தாமதங்களுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியாகின.

ஜூன் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு 

தொடர்ந்து கடந்த மாதம் 2023ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

வயது வரம்பு

குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பித்தனர். அதேபோல சமூகப் பிரிவுக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டன. 

கல்வித் தகுதி 

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர்

இன்றே கடைசி

தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பித்தனர். விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி, 04.03.2024 நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கியது. சரிபார்க்க, இன்று (மார்ச் 6) இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

* தேர்வர்கள் tnpscexams.in என்ற TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை க்ளிக் செய்து, ஒரு முறை பதிவு உள்நுழைவு விவரங்களை பதிவிட்டு உள்ளே சென்று விண்ணப்பித்தனர். முதல் முறையாக விண்ணப்பித்தவர்கள், அதற்கு ஏற்றவாறு முன்பதிவு செய்தபிறகே விண்ணப்பிக்க முடிந்தது.

தேர்வர்கள் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், விண்ணப்பங்களை சரிபார்க்க இன்றே கடைசி ஆகும். தேர்வர்கள் இரவு 11.59 மணி வரை, ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். 

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tata SUV: EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget