Schools Working Day: சனிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும்: தமிழக அரசு உத்தரவு- என்ன காரணம்?
வரும் சனிக்கிழமை (நவம்பர் 19ஆம் தேதி ) அன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் வரும் சனிக்கிழமை (நவம்பர் 19ஆம் தேதி ) அன்று செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணி நாளாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2022ஆம்ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ஆம் தேதி திங்கள் கிழமையன்று வந்தது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளைப் பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும், பொது மக்களின் எண்ணிக்கை மிகவும் கூடுதலாக இருந்தது. அக்டோபர் 22ஆம் தேதி இரவு மட்டும் சுமார் 1.65 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் பயணித்தனர்.
ஆரம்பத்தில் தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டதால், தீபாவளி அன்றிரவே பொது மக்கள் சென்னை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியதும் அவசியமானது. எனவே, பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பெற்றோரும் மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல திருப்தியுடன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில், 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 25ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தரப்பில் தகவல் வெளியானது.
வரும் சனிக்கிழமை (நவ.19) ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் https://t.co/wupaoCzH82 | #TNSchools #Colleges #TNGovt pic.twitter.com/0RNxuhRgyR
— ABP Nadu (@abpnadu) November 17, 2022
முன்னதாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய் அன்று (அக்டோபர் 25) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, அம்மாநிலக் கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து தீபாவளிக்கு மறுநாள் தமிழகத்திலும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுதமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் வரும் சனிக்கிழமை (நவம்பர் 19ஆம் தேதி ) அன்று செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணி நாளாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

