மேலும் அறிய

Polytechnic Colleges Admission: டிப்ளமோ படிப்புகளில் சேரலாம்; பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Polytechnic Colleges Admission 2024: பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ மற்றும் பகுதிநேர டிப்ளமோ படிப்பில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்.

2024- 25-ஆம்‌ ஆண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ மற்றும் பகுதிநேர டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க மே 24 கடைசித் தேதி  என்று தொழில்‌நுட்பக்‌ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.‌

தமிழ்நாட்டில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இங்கு கணினி பொறியியல், இசிஇ, இ இ இ, மெக்கானிக்கல் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

பட்டயப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை

இந்த பல்வகை தொழில்நுட்பக்‌ (பாலிடெக்னிக்) கல்லூரியில் பட்டயப் படிப்பு மாணவர்கள்‌ சேர்க்கை குறித்து தொழில்‌நுட்பக்‌ கல்வி இயக்ககம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 

இதன்படி, தமிழ்நாடு அரசு அனைத்து பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கவும்‌, இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவுசெய்ய வேண்டும்‌. இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌ மாவட்ட சேவை மையங்கள்‌ (TNEA Facilitation Centre) மூலம்‌ விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களின்‌ பட்டியல்‌ https://www.tnpoly.in/ என்ற இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி என்ன?

* முதலாம் ஆண்டு பட்டயச் சேர்க்கை (First Year Diploma Admission)

10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. (10th std passed)

* பகுதி நேர பட்டயச் சேர்க்கை (Part time Diploma Admission) 

10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ 2 ஆண்டுகள்‌ தொழில்‌ பிரிவில்‌ பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. (10th std passed and 2 years ITI passed in any branch of Engineering and Technology). அல்லது 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ 2 ஆண்டுகள்‌ தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்‌.

பதிவுக் கட்டணம்‌ 

பதிவுக்‌ கட்டணமான ரூ.150/-ஐ விண்ணப்பதாரர்‌ Debit Card  / Credit Card / Net Banking ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின்மூலம் இணையதள வாயிலாகச் செலுத்த வேண்டும்‌. எனினும் எஸ்சி/ எஸ்டி பிரிவினர்‌ பதிவுக்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டிய அவசியமில்லை.

முதலாம் ஆண்டு, பகுதி நேர பட்டயப்‌ படிப்பில் சேர மாணவர்கள், மே 10 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.  இதற்கு விண்ணப்பப் பதிவு செய்ய மே 24 கடைசித் தேதி ஆகும்.

மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்கள்‌, வழிகாட்டி மற்றும்‌ தொலைபேசி எண்களை மாணவர்கள்‌ https://www.tnpoly.in/ என்ற இணையதள வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌ என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் என்பதை அறிந்துகொள்ள https://www.tnpoly.in/public/docs/Colleges-and-Branches_2.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

பாலிடெக்னிக் படிப்புகள் குறித்த விளக்கக் கையேட்டை முழுமையாகக் காண: https://www.tnpoly.in/public/docs/TNPA-2024-2025.pdf

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpoly.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
Tamilisai On Amit shah: ஏது, அமித்ஷா கண்டித்தாரா? - வைரல் வீடியோ தொடர்பாக தமிழிசை சொன்ன விளக்கம்..!
ஏது, அமித்ஷா கண்டித்தாரா? - வைரல் வீடியோ தொடர்பாக தமிழிசை சொன்ன விளக்கம்..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!Thirupachi Benjamin | பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்Modi Odisha Event | ஒலித்த வாழ்த்து பாடல்..அமர்ந்த மோடி!பதறிய அமித்ஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு
Breaking News LIVE: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
Tamilisai On Amit shah: ஏது, அமித்ஷா கண்டித்தாரா? - வைரல் வீடியோ தொடர்பாக தமிழிசை சொன்ன விளக்கம்..!
ஏது, அமித்ஷா கண்டித்தாரா? - வைரல் வீடியோ தொடர்பாக தமிழிசை சொன்ன விளக்கம்..!
PM Modi  Italy: இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு - முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்
இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு - முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 :  குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
ENG Vs Oman T20 WolrdCup: வெறும் 19 பந்துகளில் மேட்சை முடித்த இங்கிலாந்து - ஓமன் அணியை கதறவிட்டு புதிய சாதனை
ENG Vs Oman T20 WolrdCup: வெறும் 19 பந்துகளில் மேட்சை முடித்த இங்கிலாந்து - ஓமன் அணியை கதறவிட்டு புதிய சாதனை
MS Baskar: 120 ரூபாயில் மாளிகை கட்டப்போவதில்லை.. படத்தை விமர்சிப்பவர்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் பதிலடி!
120 ரூபாயில் மாளிகை கட்டப்போவதில்லை.. படத்தை விமர்சிப்பவர்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் பதிலடி!
Embed widget