மேலும் அறிய

TN 11th Answer Sheet : நாளை முதல் பிளஸ் 1 பொதுத்‌தேர்வு விடைத்தாள் நகல்; மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிளஸ் 1 பொதுத்‌ தேர்வு விடைத்தாள் நகலினை நாளை முதல் இணைய தளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.

பிளஸ் 1 பொதுத்‌ தேர்வு விடைத்தாள் நகலினை நாளை முதல் இணைய தளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச்‌/ ஏப்ரல்‌ மாதத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்‌ தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்தனர். அந்த  மாணவர்கள், தங்களின்‌ விடைத்தாள்‌ நகலினை நாளை 07.06.2023 ( புதன்கிழமை) பிற்பகல்‌ முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

எப்படி? 

தேர்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச்‌ செல்ல வேண்டும். அதில், Notification-ஐ க்ளிக் செய்தவுடன்‌ HSE Frist Year Exam, March/ April 2023 - Scripts Download என்ற வாசகம் தோன்றும். அதை "Click" செய்தால்‌ தோன்றும்‌ பக்கத்தில் தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மாணவர்கள், தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாள்களின்‌ நகலினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மறுகூட்டல்

விடைத்தாள்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ -॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால்‌, இதே இணையதள முகவரியில்‌ (https://dge.tn.gov.in//) "Application for Retotalling/ Revaluation" என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து, வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌.

தேர்வர்கள்‌ இந்த விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள்‌ எடுத்து (08.06.2023 - வியாழன்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ 10.06.2023 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. மறு கூட்டல்‌ மற்றும்‌ மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும்‌ மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ மறுகூட்டல்‌ -॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்‌ தொகையை பணமாகச் செலுத்த வேண்டும்‌.

மறுமதிப்பீடு

பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ. 505/-

மறுகூட்டல்‌-॥

உயிரியல்‌ பாடம்‌ மட்டும்‌ - ரூ.305/-
ஏனைய‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-’’

இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. 

முன்னதாக மே 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

TNEA Random Number 2023: பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு!

NIRF Ranking 2023: தேசிய தரவரிசைப் பட்டியல்; டாப் 100 கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து 36 கல்லூரிகள்! எவை?- விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget