12th Exam Date: மாணவர்களே! 12ம் வகுப்புக்கு எந்த தேதியில் என்ன தேர்வுகள்? தெள்ளத் தெளிவாக உள்ளே
12th Exam Date: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தெந்த தேதியில் என்னென்ன தேர்வுகள் நடக்கிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை வெளியிட்டார். இதன்படி, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் அடுத்தாண்டு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்குகிறது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தெந்த தேதியில் என்னென்ன தேர்வுகள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
மார்ச் 3ம் தேதி - திங்கள் – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
மார்ச் 6ம் தேதி – வியாழன் – ஆங்கிலம்
மார்ச் 11ம் தேதி – செவ்வாய் – கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி,
ஊட்டச்சத்து & உணவுமுறை, ஜவுளி & ஆடை வடிவமைப்பு,
நர்சிங் ( பொது), வேளாண் அறிவியல், உணவு வழங்கல் மேலாண்மை
மார்ச் 14ம் தேதி – வெள்ளி - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், அறம் மற்றும்
இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல்,
கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பயோ –கெமிஸ்ட்ரி,
வீட்டு அறிவியல் ( home science), அரசியல் அறிவியல்,
புள்ளியியல், நர்சிங் ( vocational),
அடிப்படை எலக்ட்ரிக்கல் பொறியியல்
மார்ச் 18ம் தேதி – செவ்வாய் - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணக்கு மற்றும் புள்ளியியல்,
அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல்,
அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை மெக்கானிக்கல்
பொறியியல், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலாளர்.
மார்ச் 21ம் தேதி – வெள்ளி - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மார்ச் 25ம் தேதி – செவ்வாய் - இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்
பொதுத்தேர்வுகள் அனைத்தும் 10 மணியில் இருந்து 1.15 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.