மேலும் அறிய

கல்வெட்டியல் பட்டயப் படிப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்!

இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் (முழு நாள்) நேரடியாக ஓராண்டு காலம் நடைபெறும். 

ஓராண்டு கல்வெட்டியல் பட்டயப் படிப்புக்கு டிசம்பர் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் விவரம்--

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2024-ம் ஆண்டுக்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு, வரும் ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னவென்று காணலாம். 

குறைந்தபட்ச கல்வித் தகுதி: 

இவ்வகுப்புக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி. இதற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது.  இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வகுப்பு நடைபெறும் நாள்/ நேரம்:

இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் (முழு நாள்) நேரடியாக ஓராண்டு காலம் நடைபெறும். 

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பட்டய வகுப்புக்கான விண்ணப்பத்தை, www.ulakaththamizh.in - என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சேர்க்கைக் கட்டணம் ரூ.3 ஆயிரம். இந்த கட்டணத்தை “இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” எனும் பெயரில் வங்கி வரைவோலையாகவோ அல்லது நிறுவன வங்கிக் கணக்கில் இணைய வழியிலோ செலுத்தி, கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 29-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச் சாலை, 

மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,

 தரமணி,

சென்னை 600 113 

 மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலைநாட்களில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ) 044 2254 2992, 95000 12272 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

மேலும் வாசிக்க..

மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்; பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பங்கேற்கலாம் - முதல் பரிசு ரூ.25 ஆயிரம்

Optical Illusion: தாமரை குளத்தில் மறைந்திருக்கும் தவளை; கண்டுபிடிக்க 11 விநாடிகளே நேரம்!

Puzzle: மூளையை சுறுசுறுப்பாக்கும் பட புதிர்: 7 விநாடிகளில் 4 வார்த்தைகள்தான்! கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Embed widget