மேலும் அறிய

12th Result District Wise: பிளஸ்-2 ரிசல்ட் .. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.. முதல், கடைசி இடம் யாருக்கு?

12th TN Results 2024 District Wise Pass Percentage: 12 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.

TN 12th Results 2024: தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் எவ்வளவு? என்பதை பற்றி காணலாம். 

தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது.  இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32  சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 

தேர்வு முடிவுகளை   www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ,www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாக காணலாம். அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறுஞ்செய்திகள் வழியாகவும் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. 

12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தில் திருப்பூர் (97.45%), 2வது இடத்தில் ஈரோடு மற்றும் சிவகங்கை (97.42%), 3வது இடத்தில் அரியலூர் (97.25%) ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளது. கடைசி இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் (90.47%) உள்ளது. 

இப்படியான நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் பற்றி கீழே விரிவாக காணலாம். 

மாவட்டம்  தேர்ச்சி விகிதம்
சென்னை 94.48%
செங்கல்பட்டு 94.71%
காஞ்சிபுரம்  92.28%
திருவள்ளூர் 91.32%
கடலூர் 94.36%
விழுப்புரம்  93.17%
திருவண்ணாமலை 90.47%
அரியலூர் 97.25%
பெரம்பலூர் 96.44%
கள்ளக்குறிச்சி 92.91%
திருவாரூர் 93.08%
தஞ்சாவூர் 93.46%
மயிலாடுதுறை 92.38%
நாகப்பட்டினம் 91.19%
திருப்பத்தூர் 92.34%
வேலூர் 92.53%
திருச்சி 95.74%
கரூர் 95.90%
புதுக்கோட்டை 93.79%
தர்மபுரி 93.55%
கிருஷ்ணகிரி 91.87%
சேலம் 94.60%
ஊட்டி 94.27%
திருநெல்வேலி 96.44%
தென்காசி 96.07%
ராமநாதபுரம் 94.89%
தேனி 94.65%
மதுரை 95.19%
திண்டுக்கல் 95.40%
கோயம்புத்தூர் 96.97%
திருப்பூர் 97.45%
தூத்துக்குடி 96.39%
கன்னியாகுமரி 95.72%
விருதுநகர் 96.64%
நாமக்கல்  93.49%
சிவகங்கை  97.42%
ஈரோடு  97.42%
ராணிப்பேட்டை 92.28%

காரைக்கால் 87.03%
புதுச்சேரி 93.38%

மேலும் படிக்க: TN 12th Result 2024 LIVE: வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - 94.56% தேர்ச்சி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget