TN 12th Result 2024 LIVE: வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - மறுகூட்டலுக்கு நாளை விண்ணப்பிக்கலாம்
Tamil Nadu 12th Result 2024 LIVE Updates: தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான, உடனடி அப்டேட்களை அறிய ஏபிபி நாடு டிஜிட்டல் தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
Tamil Nadu 12th Result 2024 LIVE Updates
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழ்நாடு மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். குறிப்பாக 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.
விடைத்தாள் திருத்தம்
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள், மார்ச் 23-ம் தேதி முதல் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை, 86 மையங்களில் திருத்துதல் பணிகள் நடைபெற்றன.இறுதியாக, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன.
எப்போது தேர்வு முடிவுகள்?
ஆண்டுதோறும் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடுவார். எனினும் தற்போது, நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நிறைவடைந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இந்த நிலையில், தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாஹூவுக்குக் கடிதம் அளிக்கப்பட்டது. இதனிடையே, சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதிய 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் தாமதமாக வெளியாகுமா என்று கேள்வி எழுந்த நிலையில், தாமதம் எதுவும் ஏற்படாது என்றும், தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரிவிக்கப்படது.
தேர்தல் முடிவுகளை எங்கு அறியலாம்?
இதையடுத்து திட்டமிட்டபடி, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
மாணவர்கள்
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in ,
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in
ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளிகளில் மாணவர்கள் வழங்கிய, தொலைபேசி எண்களுக்கும் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.
தங்கபாலு, ரூபி மனோகரனுக்கு நெல்லை போலீசார் சம்மன்
ஜெயக்குமார் மரண வழக்கு விவகாரத்தில் கே.வி. தங்கபாலு மற்றும் ரூபி மனோகரனுக்கு நெல்லை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
TN 12th Result 2024 LIVE: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் செங்கல்பட்டைச் சேர்ந்த சாய் தர்ஷினி எனும் மாணவி 597 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார். இவர் தமிழில் 98 மதிப்பெண்களையும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார். இதனைத் தவிர, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிக கணக்குவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அசத்தியுள்ளார்.
TN 12th Result 2024 LIVE: கை கொடுத்த நான் முதல்வன் திட்டம் - HCLல் வேலைக்கு சேர்ந்த பிளஸ் 2 மாணவி
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பயிற்சி பெற்ற சேலம் மாநகராட்சிப் பள்ளி மாணவி சிவானிஸ்ரீ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்த கையோடு HCL நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது. இவர் 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
TN 12th Result 2024 LIVE: வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - மறுகூட்டலுக்கு நாளை விண்ணப்பிக்கலாம்
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் விடைத்தாள் நகல் / மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாக நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் துவண்டு போக வேண்டாம் - ஏபிபி நாடு
தோல்வி தொடர் கதையும் இல்லை, வெற்றி கடினமும் இல்லை.. விடாமல் விரட்டுங்கள், வெற்றியை வெல்லுங்கள்!.. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற தவறிய மாணவர்கள், உடனடியாக நடைபெற உள்ள துணைதேர்வு வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.