Puducherry school re-open: புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
பள்ளி திறப்பு நாள் அன்றே பாட புத்தகங்கள், சீருடைகள் மற்றும் தையல் தொகை வழங்கவும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு - ஒன்று முதல் 12 வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 152 தொடக்கப்பள்ளிகள், 33 நடுநிலை, 44 உயர்நிலை, 44 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் பள்ளிகள் 273 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கடத்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கோடைவெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவித்த நிலையில் கோடை வெயில் காரணமாக 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டு ஒத்திவைக்கபட்டது. அனைத்து அரசு பள்ளிகளும் இன்று திறக்கப்படுகிறது. பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கான ஆயத்த பணிகளாக தூய்மைப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக பள்ளிகளில் நடைபெற்றன.
வகுப்பறை தூய்மை, தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், குடிநீர் தொட்டி சுத்தப்படுத்துதல், கழிப்பறைகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர். இன்று பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க பல பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்
மேலும் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளி திறப்பு நாளிலேயே பாட புத்தகங்கள், சீருடைகள் மற்றும் தையல் தொகை வழங்கவும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.