Presidency College: மாற்றுத்திறனாளிகளுக்கு முதுகலைப் படிப்பு: செப்.23 வரை விண்ணப்பிக்கலாம் - எப்படி?
காது கேளாதோருக்கான பிரத்யேக எம்.காம். படிப்பில் சேர இன்று முதல் வரும் செப்.23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநிலக் கல்லூரி அறிவித்துள்ளது.

காது கேளாதோருக்கான பிரத்யேக எம்.காம். படிப்பில் சேர இன்று முதல் வரும் செப்.23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநிலக் கல்லூரி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பழமையான கல்லூரிகளில் ஒன்றாக சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி இருந்து வருகிறது. இந்த கல்லூரியில் காது கேளாதோருக்கான படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இளங்கலை பட்டப் படிப்புகளில் பி.காம்., பி.சி.ஏ.வில் இவர்களுக்கு என்று தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இளங்கலைப் படிப்புகளை முடித்து, முதுகலைப் படிப்பைத் தொடர்வதற்கு ஏதுவாக எம்.காம். படிப்பு தொடங்க உயர் கல்வித்துறை அனுமதித்து இருக்கிறது.
அதன்படி, சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.காம். படிப்பு தொடங்கப்பட உள்ளது. 50 இடங்களுடன் இந்த படிப்பைத் தொடங்க கல்லூரி திட்டமிட்டு இருக்கிறது. அரசிடம் முறையான அறிவிப்பு வந்ததும், நடப்பு கல்வியாண்டிலேயே (2022-23) இந்த படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மாணவர்கள் https://presidencycollegechennai.ac.in என்ற இணையதளம் வாயிலாகவோ, நேரிலோ விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து மாநிலக் கல்லூரியின் வணிகவியல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்படி சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு 2022-2023ஆம் கல்வி ஆண்டில் M.Com (HI) முதுகலைப் பட்டப் படிப்பு தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கவிருப்பமுள்ள செவித்திறன் மற்றும் வாய் பேசாமை குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் 16-09-2022 முதல் 23-09-2022 வரை மாநிலக் கல்லூரி அலுவலகத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். முழுமை செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை 23- 09-2022 மாலை 5 மணிக்குள் கல்லாரி அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.
விண்ணப்பத்தின் விலை
* ரூபாய் 60- பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு
* ரூபாய் 2- ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவு
நேரில் வர இயலாத செவித்திறன் மற்றும் வாய் பேசாமை குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர் கீழ்க்காணும் வலைதள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம்
https://drive.google.com/file/d/1b8SIjRSsnEz7uQ)_ kmc2hpiMZYUBTCR_/view?usp=sharing பதிவிறக்கம் (Download) செய்யப்பட்டு, விண்ணப்பக் கட்டணத்தைக் கீழ்க்காணும் இணையவழி மூலம் செலுத்தவேண்டும்.
Bank Details
BANK OF BARODA,
ACCOUNT NO -24760100029956
IFSC CODE: BARBOEGMORE
MICR CODE: 600012007
PRESIDENCY COLLEGE.
கூடுதல் விவரங்களுக்கு: 9444612506, 9841427532 என்ற எண்களை அழைக்கலாம்.
Also Read: TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகள்.. காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?






















