TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு; 8-ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணிக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பணியிடம் காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்
கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு,B.sc (அறிவியல்)
வயது: 32 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -30
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்
அஞ்சல் முகவரி:
துணை மணடல மேலாளர், மணடல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், துறை மங்கலம்
துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், துறை மங்கலம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். 30.09.2022
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://tncsc.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
-------------------------------
மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:
Skill Development : சென்னையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்: முதல்ல இதை படிங்க..
சென்னை கிண்டியில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய சிறு தொழில்கள் கழகம், சென்னையிலுள்ள கிண்டி பகுதியில், இளைஞர்களின் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை அறிவித்துள்ளது.
பயிற்சிகள் விவரம்:
Software Analysis - 6 வாரங்கள்
Telecom Terminal Equipment Application Developer- 6 வாரங்கள்
Product Design Engineer-10 வாரங்கள்
Total Design Engineer-10 வாரங்கள்
குறிப்பு:
- பயிற்சிகளுக்கு, நாளை முதல் சேர்க்கை தொடங்குகிறது
- மேலும் இப்பயிற்சிக்கான கட்டணம் இலவசம்
- இப்பயிற்சியிற்சிக்கு 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளுடன் நேர்காணலுக்கு வர வேண்டும் .
- விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக் குறிப்பு, வயது, கல்வி சான்றிதழ் உள்ளிட்டவைகளை எடுத்து நேரில் வர வேண்டும்
மேலும் விவரங்களுக்கு 7305375041/ 044- 22252335 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
அல்லது இந்த முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
No:B_24,NSIC-STP Complex Ekkatuthaangal,
100 Feet Road,SIDCO Industrial Estate,
Guindy,Chennai,Tamil Nadu-60003 என்ற முகவரிக்குச் சென்று தகவல்களை பெற்று கொள்ளலாம்.