மேலும் அறிய

AK RAJAN REPORT NEET: நீட் தொடர்பான ஏகே.ராஜனின் அறிக்கை.. நன்றி தெரிவித்த வட மாநிலத்தவர்கள்!

நீட்டை எதிர்க்கும் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் ஏகே ராஜன் அறிக்கையை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு நீட் தடை செய்யவேண்டிய ஒன்று எனக் குறிப்பிட்டு வருகின்றனர்

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கை நேற்று வெளியானது. இந்த அறிக்கையில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளி விவரங்களுடன் விவரமாக கூறியுள்ளனர். தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு நீட் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது,  அரசுப்பள்ளி மாணவர்கள் நீட்டால் பாதிக்கப்படுவது எப்படி உள்ளிட்ட பல தகவல்கள் புள்ளி விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீட் மட்டும் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமடையும். தமிழ்நாட்டின் சூழல் சுதந்திரத்துக்கு முந்தைய சூழலுக்கு தள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளது இந்த அறிக்கை.

இந்த அறிக்கை தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே வைரலாகி வருகிறது. நீட்டை எதிர்க்கும் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் ஏகே ராஜன் அறிக்கையை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு நீட் தடை செய்யவேண்டிய ஒன்று எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் திலீப் மண்டால், ''இந்த ஐடியாவுக்காக வட இந்தியர்களான நாங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம். நீட்  என்பது ஒரு மோசடி. நீட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஏகேராஜன் குழு கண்டுபிடித்து வெளியிட்ட புள்ளிவிவரம் இது. சமூக நீதிக்கும், ஏழ்மையானவர்களுக்கும் எதிராக நீட் இருப்பதற்கு இதுவே சான்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

AK RAJAN REPORT NEET: நீட் தொடர்பான ஏகே.ராஜனின் அறிக்கை.. நன்றி தெரிவித்த வட மாநிலத்தவர்கள்!

முன்னதாக, தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். அதன்படி, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். உறுப்பினர்களாக டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டனர்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருப்பதாக முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குறிப்பிட்டிருந்தார். நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு அமைத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு மேற்கொண்டது. அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏ.கே.ராஜன், ‘நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது. வேண்டும் என வெகுசிலர் மட்டுமே கூறியுள்ளனர்” என்று கூறினார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! விரைவில் லேப்டாப், டேப்லெட் - முதல்வர் ரங்கசாமி சொன்ன முக்கிய தகவல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! விரைவில் லேப்டாப், டேப்லெட் - முதல்வர் ரங்கசாமி சொன்ன முக்கிய தகவல்
53 விநாடிகளில் 100 உயிரினங்கள்! 2-ம் வகுப்பு மாணவர் ஆதித்யாவின் அபார நினைவாற்றல் - புதுச்சேரியில் வியக்க வைத்த சாதனை முயற்சி!
53 விநாடிகளில் 100 உயிரினங்கள்! 2-ம் வகுப்பு மாணவர் ஆதித்யாவின் அபார நினைவாற்றல் - புதுச்சேரியில் வியக்க வைத்த சாதனை முயற்சி!
School Teacher: பள்ளி ஆசிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! டிசம்பர் 11 கடைசி நாள்!
School Teacher: பள்ளி ஆசிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! டிசம்பர் 11 கடைசி நாள்!
"காலத்தையும் பணத்தையும் வீணடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்" - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "உரிமையைப் பெற்றுத்தருவோம்.." மேகமலை, வருசநாடு மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் CTR நிர்மல்குமார்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
Embed widget