NEET Admit Card 2025: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; காண்பது எப்படி?
NEET UG Admit Card 2025: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை என்டிஏ இன்று வெளியிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் இளங்கலைத் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஹால் டிக்கெட்டை தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு நீட் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்ஸி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
ஆஃப்லைன் முறையில் தேர்வு
ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் இருந்ததுபோல ஆன்லைன் முறையில் அல்லாது பேனா – காகித முறையில், ஒரே ஷிஃப்ட்டில் நீட் தேர்வு நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்து இருந்தது.
2025ஆம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் இளங்கலைத் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஹால் டிக்கெட்டை தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது.
- தேர்வர்கள் https://examinationservices.nic.in/neet2025/DownloadAdmitCard/LoginPWDNeet.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFcFR+natXIEjJ1rCf6DMgOr/hcv4rs34T5gNmvCx/R+a என்ற இணைப்பை க்ளிக் செய்து நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
- அதில், விண்ணப்ப எண், கடவுச் சொல், கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
- அவ்வாறு செய்து சப்மிட் பொத்தானை அழுத்தினால், ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
- அதை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

வேறு ஏதேனும் சந்தேகங்களுக்கு 011 - 40759000 என்ற தொலைபேசி எண் மூலமும் neetug2025@nta.ac.in இ- மெயில் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம்.
📢 Public Notice | 30 April 2025
— National Testing Agency (@NTA_Exams) April 30, 2025
# NEET (UG) 2025 Admit Card Released
NTA will conduct #NEETUG2025 on 04 May (Sun) 2025, 2–5 PM IST
📝 Admit Cards are now available at 🔗 https://t.co/vupfOoEkmH
🔐 Login to download.
The allotted centres are mentioned on the admit card
Helpdesk:…
கூடுதல் விவரங்களுக்கு: www.neet.nta.nic.in






















