School Holidays: ஐ..ஜாலி: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு; திருத்திய நாட்காட்டி வெளியீடு!
ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட நாள்காட்டியை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
![School Holidays: ஐ..ஜாலி: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு; திருத்திய நாட்காட்டி வெளியீடு! Increase in holidays for school students; Revised Calendar for 2024-25 academic year Released by TN School Education School Holidays: ஐ..ஜாலி: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு; திருத்திய நாட்காட்டி வெளியீடு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/10/95ad9c74267a15f4d406321561c1720b1725947609867332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2024- 25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை 220-ல் இருந்து 210 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட நாள்காட்டியை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’2024- 25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது. இப்பொருள் சார்ந்து பெறப்பட்ட கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டது.
210 வேலை நாட்களாகக் குறைப்பு
இதன்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளமை மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜுன் 10ம் தேதி திறக்கப்பட்டமை ஆகியனவற்றை கருத்தில் கொண்டு 6 முதல் 8 வகுப்புகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள வேலை நாட்களின் அடிப்படையில் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கும் 220 வேலை நாட்கள் (210 நாட்கள் கற்றல்- கற்பித்தல், தேர்வுகள் உள்ளிட்டவைக்கும் 10 நாட்கள் பயிற்சி உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்கும்) என நிர்ணயம் செய்து 2024-25 ஆம் கல்வியாண்டில் பின்பற்றப்பட வேண்டிய திருத்திய நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது. அது அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
அனுப்பி வைக்கப்படுகிறது’’ என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் 10 நாட்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருத்திய நாள் காட்டியை முழுமையாகக் காண:
இதையும் வாசிக்கலாம்: Teachers Protest: டிட்டோஜாக் ஆசிரியர்கள் போராட்டம்; பள்ளிக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)