மேலும் அறிய

Teachers Protest: டிட்டோஜாக் ஆசிரியர்கள் போராட்டம்; பள்ளிக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை!

ஆசிரியர்களைப் போராட்டத்துக்கு வருமாறு சங்கங்கள் வலியுறுத்தக் கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது.

அரசாணை எண் 243-ஐ நீக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு போராட்டத்தை அறிவித்தது.

இந்த நிலையில், ஆசிரியர்களைப் போராட்டத்துக்கு வருமாறு சங்கங்கள் வலியுறுத்தக் கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

எந்தவொரு பள்ளியும் ஆசிரியர் இல்லாமல் இருக்கக் கூடாது

இதுகுறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ''இன்று தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெற வேண்டும். எந்தவொரு பள்ளியும் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்காமல் இருக்கக்கூடாது.

வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணியில் எவ்வித தொய்வுமின்றி வகுப்புகள் நடைபெறுவதை, ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எந்த ஆசிரியரையும் போராட்டக் குழு சார்பாக வற்புறுத்துதல் கூடாது. அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அறிவுரைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்து இன்று அனைத்துப் பள்ளிகளும் முழுமையாக இயங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Israel Attack Gaza: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இஸ்ரேல்.. காசா மீது குண்டு மழை.. 200-க்கும் மேற்பட்டோர் பலி...
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
அதிகரிக்கும் வெயில்.. மக்களே கட்டாயம் இத பண்ணுங்க - சேலம் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை என்ன?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
Dragon Undocked: கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
கிளம்பியது டிராகன்.. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமியில் கால் பதிக்கிறார் தெரியுமா.?
Embed widget