மேலும் அறிய

Crime: விடாது துரத்தும் ஆன்லைன் ரம்மி... மதுரையில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை..பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வினோத்குமார் (21) மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள தனியார் இன்ஜினியரிங்  கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் அவர் டென்னிஸ் வீரராகவும் இருந்துள்ளார். 

இதனிடையே நேற்று முன்தினம் இரவு வரை விடுதியில் சக மாணவர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்த வினோத், காலையில் அறையில் இல்லாமல் இருந்துள்ளார். அவரை காணாமல் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் விடுதி முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது ஒரு அறைக்கதவு மட்டும் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து உள்ளே சென்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அங்கு வினோத் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஃப்ரீ பயர்,  ஆன்லைன் ரம்மி ஆகிய விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட வினோத், அதில் அதிகளவில் பணத்தை இழந்ததால் விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட பெற்றோரிடம் அடிக்கடி பணம் வாங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் பணம் கேட்டதற்காக அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் லோன் ஆப் மூலம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 15 நாட்களில் மட்டும் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்கொலை எண்ணிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 37 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதனை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget