மேலும் அறிய

கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் திகில்: ரத்தம் சொட்ட சொட்ட டிடிஆரை தாக்கிய வட மாநில வாலிபர்- நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநில வாலிபரால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே ஓடும் ரயிலில் முதன்மை டிக்கெட் பரிசோதகரை மது போதையில் தாக்கிய வட மாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது

அலாபுலாவில் இருந்து தன்பாத் வரை செல்லும் தன்பாத் அலப்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நாரன் மகன் ராஜா(35) என்பவர் டிக்கெட் எடுக்காமல் S4 ஸ்லீப்பர் கோச்சில் பயணித்துக்கொண்டு மது அருந்தி உள்ளார். இதனை பார்த்த ரயிலில் பயணித்தவர்கள் பயணச்சீட்டு பரிசோதகருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆலன் என்கிற டிடிஆர் அந்த கோச்சிற்கு சென்று டிக்கெட் இருக்கிறதா ஏன் ரயிலில் அமர்ந்து மது அருந்துகிறாய் எனக் கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த வட மாநில வாலிபர் டிடிஆரை தாக்கியுள்ளார். இதனை அறிந்த முதன்மை டிக்கெட் பரிசோதகரான சென்னை பெரம்பலூர் பகுதியைச் சார்ந்த குடியப்பன் மகன் ஜோதிலிங்கம் (49) சென்று தட்டி கேட்டுள்ளார். 

இருப்பினும் மது போதையில் இருந்த வட மாநில வாலிபர் ராஜா முதன்மை டிக்கெட் பரிசோதகரான ஜோதிலிங்கத்தை கழிவறையில் வைத்து இரும்பு கொக்கியை மூலம் தலையில் பலமாக தாக்கியுள்ளார். ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது வட மாநில வாலிபர் ஓடும் ரயிலில் இருந்து மது போதையில் கீழே குதித்துள்ளார். அவருடன் பயணித்த இரு வட மாநில வாலிபர்களும் தப்பி ஓடிய உள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த ராஜாவை ரயில்வே ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் டிக்கெட் பரிசோதகருக்கும் வட மாநில வாலிபருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவர்கள் டிக்கெட் பரிசோதகரான ஜோதிலிங்கத்திற்கும் வட மாநில வாலிபர் ராஜாவிற்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநில வாலிபரால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

தலைப்பு செய்திகள்

Crime: டெலிவரி பாயுடன் தொடர்பு.. தடம் மாறிய தாய்.. கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
Crime: டெலிவரி பாயுடன் தொடர்பு.. தடம் மாறிய தாய்.. கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Trump on Iran Hormuz:
"ஈரான் திவாலாயிடுச்சு, அவங்களாலயே அவங்களுக்கு பிரச்னை“ ஹார்முஸ் குறித்து ட்ரம்ப் பேசியது என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Embed widget