Crime: ரயிலுக்காக காத்திருந்தபோது பாலியல் அத்துமீறல்! ஸ்டேஷன் மாஸ்டர்கள் மீது பத்திரிகையாளர் புகார்!
பொதுவாக ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு யாசகம் பெறுபவர்கள், சில திருநங்கைகளால் தொல்லை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
ஹரியானாவில் பெண் பத்திரிக்கையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் இருவரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுவாக ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு யாசகம் பெறுபவர்கள், சில திருநங்கைகளால் தொல்லை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனை தடுக்க ரயில்வே போலீசார் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஹரியானாவில் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டரால் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாமே ரூ.2000 நோட்டு.. பணம் வைக்கவே தனி ரூம்.. அர்பிதா முகர்ஜி ரூ50 கோடியை பதுக்கியது எப்படி?
டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ரேவாரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.அதில் ரேவாரி ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை தான் ரயிலுக்காகக் காத்திருந்ததாகவும், அப்போது காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது போது காத்திருப்பு அறையின் கழிவறைக்கு சென்று பார்த்த போது கதவு பூட்டப்பட்டிருந்தது. இதற்கான சாவியை கேட்பதற்காக ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்திற்கு சென்றேன்.
Crime: போதையில் மீறிய வார்த்தைகள்.. அண்ணன் மகனை கல்லால் அடித்துக்கொன்ற சித்தப்பா!
அங்கு பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் வினய் ஷர்மாவும், ராமவுத்தரும் . பெண் பயணிகளின் கழிவறையை அசுத்தமாக்குவதால் கழிவறை பூட்டப்பட்டுள்ளது என கூறி சாவியை தர மறுத்தனர். அது மட்டுமல்லாமல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐபிசி 354 (பெண்ணைத் தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமை செய்தல்), 506 (மிரட்டல்) மற்றும் 509 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்த போலீசார், ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை : புகார் கொடுக்க வந்தபோது பழக்கம்.. பெண்ணுக்கு பாலியல்தொல்லை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்