எல்லாமே ரூ.2000 நோட்டு.. பணம் வைக்கவே தனி ரூம்.. அர்பிதா முகர்ஜி ரூ50 கோடியை பதுக்கியது எப்படி?
அர்பிதா முகர்ஜியின் ஒரு வீட்டில் ரூ.21.90 கோடியும், அவரது மற்றொரு வீட்டில் 27.90 கோடியும் கைப்பற்றப்பட்டது.
![எல்லாமே ரூ.2000 நோட்டு.. பணம் வைக்கவே தனி ரூம்.. அர்பிதா முகர்ஜி ரூ50 கோடியை பதுக்கியது எப்படி? Arpita Mukherjee how to Hid Whopping Rs 50 Crores Cash In Two Homes எல்லாமே ரூ.2000 நோட்டு.. பணம் வைக்கவே தனி ரூம்.. அர்பிதா முகர்ஜி ரூ50 கோடியை பதுக்கியது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/29/cb861351ca5a91dd24ba9bb256eec0611659069777_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். முன்னதாக அவரது வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அர்பிதா முகர்ஜியின் ஒரு வீட்டில் ரூ.21.90 கோடியும், அவரது மற்றொரு வீட்டில் 27.90 கோடியும் கைப்பற்றப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாக முக்கிய தகவல்கள் அடங்கிய சுமார் 40 பக்க டைரியும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
Cash of Rs 27.9 crores in cash, gold, and jewellery worth Rs 4.31 crores has been recovered till now from the residence of Arpita Mukherjee, a close aide of West Bengal Minister Partha Chatterjee: Sources pic.twitter.com/ZWJuccciw8
— ANI (@ANI) July 28, 2022
அதேசமயம் கொல்கத்தாவின் பெல்காச்சியா பகுதியில் உள்ள அர்பிதாவின் ஒரு வீட்டில் அறையில் உள்ள அலமாரியில் இருந்த பைகளில் முழுக்க முழுக்க ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை காகிதம் மற்றும் பிரவுன் டேப்பால் சுற்றப்பட்டு பணம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த அலமாரிகளின் லாக்கர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4.31 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டது.
இதேபோல் டோலிகஞ்சில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் பணத்தை மறைக்க ஒரு அறை அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகளிடம் பார்த்தா சாட்டர்ஜி தன்னுடைய வீட்டையும் இன்னொரு பெண்ணின் வீட்டையும் மினி வங்கியாகப் பயன்படுத்தினார் என்றும், அந்த இன்னொரு பெண்ணும் அவருடைய நெருங்கிய தோழி என அர்பிதா முகர்ஜி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பார்த்தா சாட்டார்ஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)