மேலும் அறிய

மதுரை : புகார் கொடுக்க வந்தபோது பழக்கம்.. பெண்ணுக்கு பாலியல்தொல்லை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

வீடு கட்டுவதற்காக வைத்துள்ள பணத்தினை தன்னிடம் தருமாறு ஆனந்த தாண்டவம் கேட்டுள்ளார். வீட்டைக் கட்டித் தருவார் என்ற நம்பிக்கையில் கோமதி மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கோமதி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தக்கடை மலையாண்டிபுரத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கான பணியை  அலங்காநல்லூரை சேர்ந்த முருகன் என்ற பொறியாளரிடம் மொத்தமாக ஒப்படைத்துள்ளார். ஆனால் முருகன் அளவுக்கதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு குறித்த நேரத்தில்  கட்டுமான பணிகளை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோமதி புகார் ஒன்றை அளித்தார். அப்போது அங்கு காவல் ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் என்பவர் பணியாற்றியுள்ளார். அவர் முருகன் மற்றும் கோமதியை வரவழைத்து  புகார் மனு குறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஆனந்த தாண்டவத்திற்கும், கோமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து வீடு கட்டுவதற்காக வைத்துள்ள பணத்தினை தன்னிடம் தருமாறு ஆனந்த தாண்டவம் கேட்டுள்ளார். வீட்டைக் கட்டித் தருவார் என்ற நம்பிக்கையில் கோமதி மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கோமதியுடையாக பழக்கத்தால் அவரது வீட்டுக்கு சென்ற ஆனந்த தாண்டவம், அங்கு கோமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,  யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார். 

பணத்தையும் கொடுக்காமல், பாலியல் தொல்லையும் அளித்து மன உளைச்சலுக்கு ஆளான தான் 2 முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டு அருகிலுள்ளவர்களால் காப்பாற்றப்பட்டதாக கோமதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து   முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணைய தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் என அனைவரிடமும் அஞ்சல் வழியாக புகார் அளித்தார். 

கோமதி புகார் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆனந்த தாண்டவத்தை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Public Grievance Redressal : 30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Embed widget