மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
மண்டபத்தில் 2.5 கடல் அட்டை; காரைக்குடியில் 1 டன் குட்கா’ சிக்கியது எப்படி !
காரைக்குடியில் 3 இலட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, அதே போல் மண்டபம் பகுதியில் 100 சாக்கில் 2.5 டன் கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காந்தி வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதிக்கு புகார் வந்தது.
இதனையடுத்து, ரவிச்சந்திரன் வீட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்த போது, சுமார் ஒரு டன் அளவுள்ள சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான பான்பராக், பான்மசாலா, புகையிலை போன்ற குட்கா பொருட்களும், தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளும் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் குட்கா பொருட்கள் பதுக்கல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவர் இதே வழக்கில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து காவல் துறையினர்..,” சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சட்ட விரோதமாக இயங்கிய குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஆய்வுக்காக கோவை மாவட்டத்திற்கு அனுப்பப்படுகிறது. ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது குறித்து கூடுதல் விசாரணை நடத்துவார்கள். கடந்த 2019-ல் இதே போல் ரவிசந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது” என்றனர்.
கிரிக்கெட் பிடிக்குமா அப்ப இவரையும் பிடிக்கும் - MS Dhoni Birthday: நீண்ட தலை முடியோடு வந்து ‛தல’யாக மாறிய தோனி! மஹியை மனம் கவர்ந்தவராக்கிய 148!
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் வனத்துறை மற்றும் இந்திய கடலோர காவல்படை இணைந்து கடற்கரையில் கூட்டு ரோந்து மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வல்லம் சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வன உயிரின குற்றம் பதிவு செய்யப்பட்டது. வேதாளை தெற்குதெரு சேர்ந்த பிரபாகரன் வயது 42 மற்றும் முகமது அன்சார் வயது 19 ஆகிய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன உயிரின சரகம் மண்டபத்தில் விசாரணை நடத்தினர். பிடிபட்ட வல்லத்தில் சுமார் 100 சாக்குகளில் இறந்த கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்த எடை சுமார் 2.5 டன் (2500 கிலோ), மேற்படி ரோந்துந்து பணியில் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் மகேந்திரன் மற்றும் வனக் காப்பாளர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படை டெபிட்டி கமாண்டர் ரோஷன் பால் சிங் தலைமையில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -குறைந்தது உள்ளூர் பக்தர்களின் வருகை ; பொலிவு பெறுமா மீனாட்சியம்மன் கோவில் !
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion