மேலும் அறிய
Advertisement
குறைந்தது உள்ளூர் பக்தர்களின் வருகை ; பொலிவு பெறுமா மீனாட்சியம்மன் கோவில் !
”பழமை மாறமல் புனரமைக்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்படுகிறது. மீனாட்சியம்மன் கோயில் விரைவில் பொலிவு பெறும்" என்றனர்
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோவிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப் படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இரவு சுமார் 10:30க்கு கரும் புகை சூழ்ந்த சூறாவளி போல் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து புகை வெளி வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் வந்தபோது ஆயிரங்கால் மண்டபத்தை ஒட்டியிருந்த கடைகளில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. உடனே தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 36-க்கும் மேற்பட்ட கடைகளில் தீப்பற்றி எரிந்தது. தீ வேகமாக பரவியதால் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சேதமாகின. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமான பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரையும் இடிந்தது. வீர வசந்தராயர் மண்டபத்தில் தூண்கள் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து சுமார் 20 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து பணிகளை வேகப்படுத்தியது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை அதன் வேலைப்பாடுகள் முடிவடையாமல் இருப்பதாக மதுரை மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்....," முழு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு நேற்று அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து, நிம்மதியாக சாமியை வணங்கினோம். மதுரை மீனாட்சியம்மன் கோயில், கொரோனா காலகட்டத்திற்கு முன்பில் இருந்தே கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப் பட்டுள்ளது. அதனால் உள்ளூர் பக்தர்களின் வருகை குறைந்துவிட்டது. மீனாட்சியம்மன் கோயிலை குல தெய்வமாக பார்த்த மக்கள் திருமணம் பேசி முடிப்பது, திருமணம் செய்வது, தாலி மாத்துவது, வளைகாப்பு நடத்துவது என எண்ணற்ற சுப காரியங்களை கோயிலில் செய்துவந்தனர். இந்நிலையில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தியதால் மனநிறைவுக்கு கூட உள்ளூர் பக்தர்கள் சாமிகும்பிட அதிகளவு வருவதில்லை. ஒரு வணிக நோக்கத்தோடு மட்டும் கோயில் நிர்வாகம் செயல்படுகிறது. கோயில் தலமாக இருந்த இடம் சுற்றுலா தலமாக மாறிவருகிறது. வெளியூர் பக்தர்கள் மட்டுமே மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அதிகளவு சென்று வருகின்றனர்.
இதனால் கோயிலின் பாரம்பரிய இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனம் மேற்கொள்வதற்கு ரூ.100கட்டணம் எனவும் ஒரு தரிசனம் மட்டும் மேற்கொள்வதற்கு ரூ.50 கட்டணம் என தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வீர வசந்த ராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மதுரை உயர்நீதிமன்றம் கோவில் வளாகத்திற்குள் செல்போன்கள் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்தது, இதனை அடுத்து கோவில் நிர்வாகத்தின் சார்பாக ஐந்து கோபுர வாயில்களிலும் கட்டண செல்பேசி பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டன, கோவிலுக்கு வரும் பக்தர்களின் செல்பேசிகள் தலா ஒன்றுக்கு ரூபாய் 10 வீதம் கட்டணம் பெறப்பட்டு தற்போது 5 ரூபயாக குறைக்கபட்டுள்ளது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 4 கோடியே 55 லட்சத்து 67 ஆயிரத்து 635 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவலில் பெறப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு வசூலிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் கோயில் நிர்வாகம் உள்ளூர் பக்தர்களின் சிரமங்களையும் குறைக்க வேண்டும். அதே போல் தீ விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவாக சரி செய்ய வேண்டும்” என்றனர்.
இது குறித்து வழக்கறிஞர் முத்துக்குமார்..., " மதுரை மக்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவதை தங்களது அன்றாட வேலையாக வைத்திருந்தனர். தற்போது செல்போன் வைத்துவிட்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களால் அதிகளவு வருவதில்லை. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து வேலை விரைவாக நடைபெற்றது. ஆனால் பழமை மாறாமல் கோயிலை மீண்டும் சரி செய்ய வேண்டும் என தூண்கள் வெட்டி எடுக்கப்படும் போது உடைந்து, உடைந்து போவதால் கோயிலுக்கு தூண்கள் கொண்டுவருதில் சிரமம் இருப்பதாக கோயில் ஜே.சி என்னிடம் தெரிவித்தார்" என்றார்.
கோயில் நிர்வாகம் தரப்பில் சிலர்...," கோயிலில் வேலைகள் விரைவாக நடந்துவருகிறது. பழமை மாறமல் புனரமைக்க வேண்டும் என்பதால் தாமதம் ஏற்படுகிறது. மீனாட்சியம்மன் கோயில் விரைவில் பொலிவு பெறும்" என்றனர்
மேலும் செய்திகள் படிக்க கிளிக் செய்யவும் -மதுரை : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மீனாட்சியம்மன் கோவிலில் மகிழ்ச்சியுடன் பக்தர்கள்..!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion