தோட்ட வேலைக்கு வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; கணவர் உடந்தை... பாஜக பிரமுகர் கைது
செங்கம் அருகே தோட்ட வேலைக்கு வந்த திருமணமான இளம் பெண்ணை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் செல்வி. இவருடைய கணவர் சீனுவாசன். இவர் பா.ஜ.க வில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளராக இருந்தார் . சீனுவாசன் ஏற்கனவே கரியமங்கலம் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வந்தவர். கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தனது மனைவியான செல்வியை நிறுத்தி வெற்றிபெற்றார். இந்த நிலையில் சீனுவாசனுக்கு சொந்தமாக பேயலாம்பட்டு பகுதியில் விவசாயம் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ராமஜெயம் அவருடைய மனைவி இரண்டு பிள்ளைகள் மற்றும் ராமஜெயத்தின் தந்தை பெருமாள், அம்மா பச்சையம்மாள் ஆகியோர் அங்கு தங்கியுள்ளனர்.
பின்னர் சீனுவாசன் நிலத்தில் ராமஜெயம் குடும்பத்தினர் தோட்டவேலைகளை செய்து வந்தனர். மேலும் பாஜக பிரமுகர் சீனுவாசன் அடிக்கடி விவசாயா நிலத்திற்கு வந்து விவசாய வேலைகள் எப்படி நடக்கிறது என்று பார்வையிடுவார். அப்போது ராமஜெயத்தின் மனைவியான 22 வயது இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். மீண்டும் நிலத்திற்கு வந்த சீனுவாசன் இளம்பெண் நிலத்தில் தனியாக வேலை செய்வதை அறிந்த அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணவர் ராமஜெயத்திடம் கூறியுள்ளார். இதற்கு கணவர் ராமஜெயம் சீனுவாசன் நிலத்தின் உரிமையாளர், அவரின் ஆசைக்கு அனுசரித்து போவதில் எந்தவித தவறில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தன்னுடைய கணவர் இப்படி கூறிவிட்டார் என மனவேதனையில் இருந்த 22 வயது இளம்வயது பெண் என்ன செய்வது இதைப்பற்றி யாரிடம் தெரிவிப்பது என மன குழப்பத்தில் அவர், தன்னுடைய மாமனார் பெருமாள், மாமியார் பச்சையம்மாளிடமும் தெரிவித்துள்ளார், அவர்களும் இளம்பெண்ணின் கணவர் கூறியதை தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே 22 வயது இளம்பெண் தோட்டத்தில் தனியாக இருந்தபோது அங்கு வந்த பாஜக பிரமுகர் சீனுவாசன் இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. உடனடியாக இளம் பெண் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாஜக பிரமுகர் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த இளம் பெண்னின் கணவர் ராமஜெயம், மாமனார் பெருமாள், மாமியார் பச்சையம்மாள் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி யபின்னர் இவர்கள் நான்கு பேர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பார்ப்பப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

