ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர் சாட்சியம்.. செப் 16- ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை - பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட அரசு மருத்துவர் நேரில் ஆஜராகி சாட்சியம் - செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020-ம் வருடம் ஜூன் 19-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
Madurai ; சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை - பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட அரசு மருத்துவர் நேரில் ஆஜராகி சாட்சியம் - செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு ஒத்திவைப்பு.
— arunchinna (@arunreporter92) September 13, 2022
further reports to follow @abpnadu @SRajaJourno @thangadurai887 | @seranfilmmaker pic.twitter.com/972yxbJVvr
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்