மேலும் அறிய

ஓபிஎஸ்க்கு இடமில்லை என்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்க தான் சோதனை - ஆர்.பி.உதயகுமார்

‘வருமான வரி சோதனை மூலம் எங்களை சோர்வடைய செய்ய முடியாது’ - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வரிசையாக வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவை சோதனை நடத்தி வருகின்றது. அந்தவகையில் தற்போது மீண்டும் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய்பாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றது.

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் எஸ்.பி.வேலுமணி தொடர்பாக தொண்டமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் புதுக்கோட்டையிலுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவர் மீது முறைகேடு புகார் பதியப்பட்டு அந்தப் புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Anti corruption wing conducts raids in places related to Former Aiadmk Ministers C.Vijayabaskar and S.P.Velumani Raid: மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை வளையத்தில் சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. காலை முதல் ரெய்டு..

 ஆர்.பி.உதயகுமார் தெரிவிக்கையில், “வரலாறு சிறப்பிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வழங்கி உள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினராக பன்னீர் செல்வம் இல்லை, அவர் எப்படி உரிமை கூற முடியும் அதேபோல் அவர் செய்த கலவரத்தையும் கருத்தில் கொண்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்து, தலைமை கழக சாவியை உயர்நீதிமன்றம் எடப்பாடியாரிடம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று அறிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை கழகத்தில் உள்ள தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சூழ்நிலையில், இதைதிசை திருப்பவும் தமிழக அரசு காழ்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் இல்லங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய நபர்கள் மீது சோதனை நடத்தி வருகிறது.
 
DVAC Raid: Police arrest 6 Aiadmk MLA gathered and protested outside former minister SP Velumani house MLA Arrest: முன்னாள் அமைச்சர்களுக்கு ஆதரவு:  களமிறங்கிய அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்
 
மின்சார 52% கட்டணம் உயர்வு, 150 சதவீத சொத்து உயர்வு, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, இதற்கெல்லாம் மேலாக பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடைஅணிந்து போதை வஸ்துகளை பயன்படுத்தி வருவதை கண்டு தமிழகம் எங்கே செல்கிறது என்று நீதிமன்றமே கடும் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்துள்ளது, அதேபோல் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 30 பேர்  தற்கொலை செய்துள்ளனர். இதை எல்லாம் சீர்படுத்த வேண்டிய காவல்துறை பிரதான எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக எத்தனை முறை சோதனை செய்வீர்கள் என்று மக்களே சலிப்பு தட்டும் வகையில் சோதனை செய்து வருகின்றனர். காவல்துறை தங்கள் கடமையாற்றாமல் எதிர்க்கட்சி பழிவாங்கும் ஏவல் துறையாக உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசிடம் தமிழகத்திற்கு 99 விருதுகளை பெற்றுக் கொடுத்தார், எடப்பாடியாரின் தளபதியாக செயல்பட்டு வருகிறார், ஆனால் எங்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் வண்ணம் , அதிமுகவை எடை போடும் வகையில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் எங்களை சோர்வடைய செய்ய முடியாது. இது போன்ற சோதனைகள் மூலம் ஜனநாயக விரோத போக்கை அரசு கடைப்பிடித்து வருகிறது. இன்றைக்கு நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளதை மறைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 20% வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த எடப்பாடியார் கொண்டு வந்த 7.5 சதவீதம் மூலம் மருத்துவ வாய்ப்பு பெற முடியும்.
 
ஓபிஎஸ்க்கு இடமில்லை என்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்க தான் சோதனை - ஆர்.பி.உதயகுமார்
 சோதனை என்ற பெயரில் தொடர்ந்து வஞ்சம் தீர்க்கும் அரசாக இந்த அரசு உள்ளது, இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த அராஜக நடவடிக்கைகளை மக்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டார்கள் , எடப்பாடியாருக்கு உச்ச நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றியையும், திமுக அரசு கொண்டு வந்த சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, நீட் தேர்வில் தமிழகம் பின்னடைவு இவற்றை எல்லாம்  திசை திருப்பத்தான் சோதனை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget