மேலும் அறிய
மானாமதுரை: பட்டியலின இளைஞர் படுகொலை! சாதிய வன்கொடுமை, போராட்டம்: பதற வைக்கும் பின்னணி! #சாதியவன்முறை #தமிழகம்
பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

விசிக.,வினர் சாலை மறியல்
Source : whats app
மானாமதுரையில் பட்டியலின இளைஞர் வெட்டிக்கொலை –சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஆறு பேர் கைது - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.
விழாவிற்காக மைக் செட் போட்ட இளைஞர்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அண்ணாவாசல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியிலன வகுப்பைச் சேர்ந்த காளீஸ்வரன் (28), சங்கமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற வீட்டு கிரகப்பிரவேச விழாவிற்காக மைக் செட் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் திடீரென அங்கு புகுந்து, அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். காளீஸ்வரனின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
பழிவாங்கும் நோக்கத்தில் கொலை
இதுகுறித்து மானாமதுரை காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு அருகிலுள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பழிவாங்கும் நோக்கத்திலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து காவல்துறையினர் தொடர்புடைய ஆறு நபர்களை கைது செய்து, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் சாலை மறியல்
இந்நிலையில், இறந்த காளீஸ்வரனின் உடலை வாங்க மறுத்து, விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மற்றும் உறவினர்கள் இணைந்து மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், குடும்பத்திலொருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று பத்து நிமிடங்களுக்கு மேல் சாலை மறியலில் ஈடுபட்டனர். பத்து நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















