மேலும் அறிய

சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 21 கோயில்கள் இன்று மூடல்! தரிசனம் எப்போது?

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்படும் என்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் 21 உபகோயில்கள் மதியம் 12.30 மணி முதல் நாளை காலை வரை நடை சாத்தப்படும் - கோயில் நிர்வாகம்.

உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில்  
 
மதுரையில் உள்ள மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்நிலையில் கோயில்  நடை சாத்தப்படும் என்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்படும்
 
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் இன்று மத்திம காலதீர்த்தம், மத்திம காலஅபிஷேகம், மத்திம காலசுவாமி புறப்பாடு, 11.41 மணிக்கு நடைபெறும். இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு மேல் கோயில் நடை சாத்தப்படும் என்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது இந்த நேரத்தில் பக்தர்கள், பொது மக்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோஅனுமதி இல்லை
 
நாளை திங்கள் கிழமை காலை முதல் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்யலாம்
 
மீனாட்சியம்மன் கோயிலுக்கு உட்பட்ட உபகோவில்களான தெப்பக்குளம் மாரியம்மன்கோவில், முக்தீஸ்வரர் கோயில், பைரவர் கோவில், வடக்குவாசல் அனுமார் திருக்கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர்கோயில்,  செல்லத்தம்மன்கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோயில், கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோவில் உள்ளிட்ட 21 கோயில்களின் நடையும் இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை அதிகாலை வரைநடை சாத்தப்படும் - கோயில் இணை ஆணையர் அறிவிப்பு செய்துள்ளார்.
 
தலைப்பு செய்திகள்

குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி எடுத்து பரவசம்!
குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி எடுத்து பரவசம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget