மேலும் அறிய
மதுரை ஓட்டலில் நுழைந்து உரிமையாளர் படுகொலை: கையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூரம்!
மதுரை அரசு தொழிற் பயிற்சி பள்ளி வாசலில் உணவக உரிமையாளர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை.

போலீஸ்_ஆய்வு
மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மதுரை k.புதூர் பகுதியில் இருக்கக்கூடிய (I.T.I) அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் எதிரே மெஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் உணவகத்தில் இருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் முத்துக்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு அவருடைய இடது கையினை அரசு தொழிற் பயிற்சி பள்ளி வாசலில் போட்டுவிட்டு சென்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் தடையங்களை சேகரித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு தொழிற்பயிற்சி பள்ளி வாசலில் உணவக உரிமையாளர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

இது குறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது..,” மதுரை கே.புதூர் பகுதி பரபரப்பானது. இப்பகுதியில் உள்ள ஐ.டி.ஐ அருகே சிறிய ஹோட்டல் ஒன்றை முத்துக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கையை துண்டாக எடுத்த கொலையாளிகள் அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விரைவாக வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம். புதூர், மூன்று மாவடி, அவுட் போஸ்ட், ரிசர்வு லைன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.சி.டி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என தெரிவித்தனர்.

மதுரையில் ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#RAINALERT | சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யக்கூடும்
— ABP Nadu (@abpnadu) November 10, 2021
- வானிலை ஆய்வு மையம் https://t.co/wupaoCQKa2 | #TNRains | #Rains | #ChennaiRains | #Chennai pic.twitter.com/YMprU9QB7e
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விழுப்புரம்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion