Crime: 80 வயதில் தந்தைக்கு ஏற்பட்ட ஆசை...கோபத்தால் மகன் செய்த கொடூரச் செயல்...!
முதலில் தனது தந்தையின் கழுத்தை அறுப்பதற்காக கத்தியால் தாக்கியதாகக் கூறினார். பின்னர் ஒரு கல்லை எடுத்து தனது தந்தையின் தலையில் பலமுறை அடித்து கொடூரமாக கொன்றுள்ளார்.
தனது தந்தை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை அறிந்த மகன் தந்தையை கல்லால் அடித்துக் கொன்றுள்ளார். 80 வயதில் திருமணம் செய்ய ஆசைப்பட்டு மேட்ரிமோனியலில் பதிவு செய்திருந்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவின் ராஜகுருநகரில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தேறியுள்ளது.
என்ன நடந்தது?
47 வயதுடைய சேகர் போர்ஹாடே என்பவர் தனது 80 வயது தந்தையுடன் நந்ததீப் ஹவுசிங் சொசைட்டி ராஜ்குருநகரில் உள்ள தாலில் வசித்து வந்தார். ஒருநாள் அவரது தந்தை மறுமணம் செய்யும் நோக்கத்தில் மேட்ரிமோனியலில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த 47 வயது மகன் தனது 80 வயது தந்தையை கொடூரமாக கொன்றுள்ளார். மேலும் படிக்க: Crime | கணவரின் கட்டாயத்தினால் பலருடன் உறவு..சமூகவலைதள க்ரூப்புகளில் கொடூரம்.. 6 பேர் கைது
கொடூரமான செயலைச் செய்த பிறகு, சேகர் போர்ஹாடே, சரணடைய ராஜ்குரு காவல் நிலையத்திற்குச் சென்று தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். அவர் தனது வாக்குமூலத்தில், தனது தந்தை மறுமணம் செய்து கொள்ள விரும்புவதை அறிந்து ஆத்திரமடைந்து தனது வயதான தந்தையை கொடூரமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க: Actor Dileep Case | ”கைதுசெய்த எஸ்.பி சுதர்ஷனின் கையை வெட்டுவேன்” என பேசினார் நடிகர் திலீப் : FIR அறிக்கை என்ன சொல்கிறது?
முதலில் தனது தந்தையின் கழுத்தை அறுப்பதற்காக கத்தியால் தாக்கியதாகக் கூறினார். பின்னர் ஒரு கல்லை எடுத்து தனது தந்தையின் தலையில் பலமுறை அடித்து கொடூரமாக கொன்றுள்ளார். பின்னர், கத்தியைக் கூர்மையாக்கி தந்தையின் தலையை வெட்டவும் முயன்றார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கவுரவ் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வயதான தந்தையை மகனே அடித்து கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க: Hyderabad: திருமணத்தை மீறிய உறவில் இருந்த தாய்... எச்சரித்தும் கேட்காத காதலனை கத்தியால் குத்திய மகன்!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்