Hyderabad: திருமணத்தை மீறிய உறவில் இருந்த தாய்... எச்சரித்தும் கேட்காத காதலனை கத்தியால் குத்திய மகன்!
ஹைதராபாத்தில் தாயுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளைஞரை கத்தியால் குத்திய மகன் நண்பர்களுடன் தலைமறைவானார்.
![Hyderabad: திருமணத்தை மீறிய உறவில் இருந்த தாய்... எச்சரித்தும் கேட்காத காதலனை கத்தியால் குத்திய மகன்! Hyderabad Crime News19 year old stabs mom paramour Hyderabad: திருமணத்தை மீறிய உறவில் இருந்த தாய்... எச்சரித்தும் கேட்காத காதலனை கத்தியால் குத்திய மகன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/09/6bd7785fed4117579fdae26d9aa03e1a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வெமூலா நீலம்மா. 38 வயதான இவர் ஹைதராபாத் பெருநகர மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 19 வயதான ஸ்ரீராம் என்ற மகன் உள்ளார். நீலம்மாவுடன் அனில்குமார் என்பவரும் பணியாற்றி வருகிறார். 28 வயதான அனில்குமாரும், நீலம்மாவும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததால் தொடக்கத்தில் பழக்கமாக இருந்த இவர்களது நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
நீலம்மா தினமும் மணிக்கணக்கில் அனில்குமாருடனே நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இதை அறிந்த ஸ்ரீராம் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். இதனால், தனது அனில்குமாருடனான பழக்கத்தை கைவிடுமாறு தனது தாயைக் கண்டித்துள்ளார். ஆனால், நீலம்மா அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து அனில்குமாருடன் பேசியும், பழகியும் வந்துள்ளார்.
இதனால், மிகுந்த ஆத்திரமடைந்த ஸ்ரீராம் அனில்குமாரின் செல்போன் எண்ணை கைப்பற்றி அவரிடம் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் நேரில் பேச வேண்டும் என்று கூறி எம்.கே.ஆர். நிகழ்ச்சி அரங்கிற்கு வருமாறு அழைத்துள்ளார். அனில்குமாரும் அங்கு சென்றுள்ளார். அங்கு, அனில்குமாரிடம் தனது தாயுடனான உறவை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனாலும், அனில்குமார் ஸ்ரீராமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Manju Warrier | மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் அனில்குமாரை கட்டையால் தாக்கியுள்ளனர். அப்போது, ஸ்ரீராம் தான் வைத்திருந்த கத்தியால் அனில்குமாரை குத்தினார். அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் தப்பிய அனில்குமார், அங்கிருந்து தப்பித்து பிரதான சாலைக்கு ஓடிவந்துள்ளார். சட்டையில் ரத்தக்கறையுடன் ஓடி வந்த அனில்குமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அனில்குமாரை கொல்ல முயற்சி செய்த ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)