மேலும் அறிய

நாகை : கல்லூரி மாணவி தற்கொலை.. தாளாளர் உட்பட மூவரை கைதுசெய்ய வலியுறுத்திய உறவினர்கள்..

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கல்லூரி தாளாளர் உள்ளிட்ட மூவரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கல்லூரி தாளாளர் உள்ளிட்ட மூவரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள். நான்காவது நாளாக உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உயிரிழந்த மாணவியின் தந்தைக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தா நகர் வண்ணான் குளம் மேற்கரையில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி, சித்ரா தம்பதியினரின் மூன்றாவது மகள் சுபாஷினி சர் ஐசக் நியூட்டன் (தனியார் கல்லூரி) கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வந்தார். முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக பணம் கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளது. மேலும் பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகளை வெளியே நிற்கவைத்து அவமானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நாகை : கல்லூரி மாணவி தற்கொலை.. தாளாளர் உட்பட மூவரை கைதுசெய்ய வலியுறுத்திய உறவினர்கள்..

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு பயிலும் சுபாஷினி கடந்த 30-ஆம் தேதி தாய் தந்தையர் வேலைக்கு வெளியே சென்ற நேரத்தில்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதைத்தொடர்ந்து நாகூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு வழக்குப் பதிவு செய்து நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுசெய்து அங்கு பிணவறையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது நேற்று வரை தொடர்ந்து மூன்றாவது நாளாக சாலை மறியல் மற்றும் காத்திருப்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இன்று மாணவி சுபாஷினி உயிரிழப்பு குறித்து நாகூரில் அவர்களது இல்லத்தில் ஏடி எஸ் பி, ராமு,சுகுமாரன்,  டிஎஸ் பி சரவணன், ரமேஷ் பாபு உள்ளிட்டோர் தாய் தந்தை மற்றும் உறவினர்களிடம் மாணவி உயிரிழப்பு குறித்து கேட்டறிந்தனர். 
 
நாகை : கல்லூரி மாணவி தற்கொலை.. தாளாளர் உட்பட மூவரை கைதுசெய்ய வலியுறுத்திய உறவினர்கள்..
 
அப்போது உயிரிழந்த மாணவியின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் காவல்துறையினரையும் காலில் விழுந்து கதறி என் மகளுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்படக்கூடாது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுதனர். அவர்களிடம் உயிரிழந்த மாணவியின் தந்தை சுப்பிரமணியத்திடம் வரும் 4-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நீதிபதி  விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என  காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளதால் மாணவியின் உடல் நான்காவது நாளாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி

Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?

சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 

காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?

ABP Premium

வீடியோ

Telangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?

ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?

பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!

விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!

Embed widget