Sonia Agarwal Arrest | போதைப்பொருள் விவகாரம்.. மாடல் சோனியா அகர்வால் கைது
போதைப்பொருள் விவகாரத்தில் மாடல் சோனியா அகர்வாலை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை போலீசாரும், போதை தடுப்புப் பிரிவு காவலர்களும் தீவிரமாக எடுத்து வருகின்றனர். பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் இதில் சிக்கி வருகின்றனர். இந்தி, கன்னடம் என சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் விசாரணைக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமாத்துறையினர் மட்டுமின்றி தொழிலதிபர்களும் இதில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மாடல் சோனியா அகர்வாலை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். அவரோடு சேர்த்து டிஜே வஜன் சின்னப்பா, தொழிலதிபர் பாரத் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த பெண் ஒருவர் காணாமல் போன விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காணாமல் போன பெண் நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த விவகாரத்தை நூல் பிடித்துச் சென்ற போலீசார், தாமஸ் என்பவரை ஆகஸ்ட் 12ம் தேதி கைது செய்தனர்.
Ponniyin Selvan Update: பொன்னியின் செல்வன் சூட்டிங்கிற்கு பை..பை... சொன்ன விக்ரம்!
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் குறித்தும், அதில் நடிகை சோனியா அகர்வால், வஜன் சின்னப்பா, தொழிலதிபர் பாரத் குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையிலேயே மூன்று பேரையும் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது விவகாரம் கன்னட சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கன்னட நடிகைகளான சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி இருவரும் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கினர். தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறை 2 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியது உண்மை எனத் தெரிவித்து கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளிவந்தனர். இது தொடர்பான விசாரணையில் நடிகைகளின் தலைமுடி தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதுவும் உறுதி ஆனதால் நடிகைகளுக்கு எதிரான போதைப்பொருள் விவகாரம் இன்னும் பரபரப்பாகியுள்ளது. இந்த நேரத்தில் சோனியா அகர்வாலின் கைது மேலும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
'தவறு செய்துவிட்டேன்' : இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட ஷில்பா ஷெட்டி..!