Mayiladuthurai: குத்தாலம் கோயில் திருவிழாவில் கரகம் தூக்குவது தொடர்பாக இரு தரப்பினர் மோதல்
குத்தாலம் கோயிலில் கரகம் தூக்குவது தொடர்பாக ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தகராறில் போலீசார் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கண்டியூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கடந்த வாரம் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கோயில் சக்தி கரகம் தூக்குவது தொடர்பாக ஒரே சமுதாயத்தை சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக இரண்டு தரப்பினரும் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், குத்தாலம் காவல்துறையினர் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், கோயில் விழாவில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்த செங்குட்டுவன் என்பவரை கைது செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை - கல்லணை சாலையில் அஞ்சார்வார்த்தலை என்ற இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Chennai Police: டிராஃபிக் சிக்னலில் இனி பாட்டுக்கு ‘நோ’: சென்னை காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு!
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனிடையே போராட்டத்தை தொடர்ந்து செங்குட்டுவனை குத்தாலம் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்