அம்மனின் 10 பவுன் தாலி சங்கிலி திருட்டு... ஆடி மாதத்தில் பரபரப்புக் கிளப்ப திட்டமிட்டு திருடிய நபர்!
தன்னை கோயில் வேலையில் இருந்து நிறுத்திவிட்டதால் பழிக்குப்பழியாக அம்மன் தாலி செயினை திருயடிதாகவும் அந்நபர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை, வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி, 8ஆவது தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நள்ளிரவு கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலி அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது.
முன்னாள் வேலையாளின் கைவரிசை
இந்நிலையில், கோயில் நிர்வாகி ராஜம்மாள் அளித்த புகாரின்பேரில் எம்.கே.பி. நகர் காவல் துறையினர் இத்திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வந்தனர்.
மேலும் படிக்க: Johnny Depp : ஒயின் பாட்டில்.. உடலுறவு.. போதை மருந்து.. அசிங்கமான வார்த்தைகள்.. ஜானி டெப் மீது மீண்டும் புகார்..
இந்நிலையில், முன்னதாக இந்தக் கோயிலில் ஊழியராக வேலை செய்து வந்தவரும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நீக்கப்பட்டவருமான ஆவடி அடுத்த கள்ளிக்குப்பம், கங்கா நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவருமான விக்னேஸ்வரன் (வயது 23) என்பவர், திருட்டு நடந்த அன்று கோயில் பகுதியை சுற்றிச் சுற்றி வந்தது பதிவாகியிருந்தது.
பரபரப்பு கிளப்ப திருட்டு
இதனையடுத்து அந்நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், விக்னேஷ் குமார் அம்மன் தாலி செயினை திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் இருந்து 10 சவரன் செயினை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், தன்னை கோயில் வேலையில் இருந்து நிறுத்திவிட்டதால், பழிக்குப்பழியாக அம்மன் தாலி செயினை திருடியதாகவும், ஆடி மாதத்தில் தாலியை திரு டினால் பரபரப்பாகும் என்பதால் பல நாள்கள் காத்திருந்து ஆடி மாதத்தில் அம்மன் செயினை கொள்ளையடித்ததாகவும் விக்னேஷ் நான் நினைத்தப்படியே இந்த சம்பவம் பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது என்று விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதையடுத்து அவரை க் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்