Crime: காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட காதலன்... மும்பையில் பயங்கரம்!
டிசம்பர் 12ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற இளம்பெண் வைஷ்ணவி, இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால், இளம்பெண்ணின் பெற்றோர் கலம்போலி காவல்நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தனர்.
Crime: மும்பையில் கொல்லப்பட்ட 19 வயது பெண்ணின் உடல் 34 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை கொலை செய்த காதலன்:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் வைஷ்ணவி பாபர் (19). இவர் சியோனில் என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வைபவ் புருங்கலே (24) என்பவரை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.
பின்னர், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற இளம்பெண் வைஷ்ணவி, இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால், இளம்பெண்ணின் பெற்றோர் கலம்போலி காவல்நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தனர்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், டிசம்பர் 12ஆம் தேதி வைபவ் புருங்கலே, ஜூயிநகர் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வைபவ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, வைபவ் புருங்கலேவின் செல்போனை ஆய்வு செய்ததில் போலீசார் தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், வைஷ்ணவியை கொலை செய்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். 'L01-501' என்று நம்பரை கடிதத்தில் குறிப்பிடிருந்தார்.
தற்கொலை குறிப்பு:
இந்த எண் குறித்து போலீசார் ஆய்வு செய்ததில், வனத்துறையால் குறிக்கப்பட்ட மரத்தின் எண் என்பது தெரிந்தது. இதனை அடுத்து, கார்கர் மலைப்பகுதியில் மரம் உள்ள பகுதியில் தேடியபோது, இளம்பெண் வைஷ்ணவியின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர்.
அங்குள்ள ஒரு புதருக்குள் பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். மேலும், கல்லூரிக்கு சென்றபோது அணிந்திருந்த உடை, வாட்ச், அடையாள அட்டை ஆகியவற்றின் அடிப்படையில் அவரது உடல் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “34 நாட்களுக்கு பிறகு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேடுதல் நீடித்ததால் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டனர். இளம்பெண்ணை, கழுத்தை நெரித்து கொலை செய்து புதருக்குள் வீசப்பட்டிருக்கிறார்" என்றனர்.
மேலும், காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில், பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க
Crime: குழந்தையை கொன்ற பிறகு உடலுடன் 19 மணி நேரம் காத்திருந்த பெங்களூரு சிஇஓ! கோவா கொலையில் பகீர்!