மேலும் அறிய

IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! ஒரே மாதத்தில் கதிகலங்க வைக்கும் மூன்றாவது தற்கொலை - என்னாச்சு?

ஐஐடி கான்பூர் விடுதி அறையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

மாணவி தற்கொலை:

இந்த நிலையில், தற்போது மாணவி ஒருவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையின் கூறுப்படி,  பிஎச்டி படித்து வந்த மாணவி பிரியங்கா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்காவ் பகுதியைச்  சேர்ந்தவர் பிரியங்கா.

பிரியங்காவின் தந்தை நரேந்திர ஜெய்ஸ்வால், அவரது விடுதியின் மேலாளரை தொடர்பு கொண்டு, தனது மகள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.  இதனையடுத்து, விடுதி மேலாளர்  ரிது பாண்டே பிரியங்காவின் அறைக்கு சென்று கதவை தட்டியிருக்கிறார்.

நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததை அடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். அங்கு, மாணவி பிரியங்கா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டிருக்கிறார்.  இதனையடுத்து, விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், மாணவி பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஒரு மாதத்தில் 3 பேர்:

ஐஐடி-கான்பூர் நிர்வாகத்தின் ஆதாரங்களின்படி, மாணவி பிரியங்கா டிசம்பர் 29, 2023 அன்று கெமிக்கல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பிஎச்டி திட்டத்தில் சேர்ந்திருக்கிறார். மேலும், ஒரு மாதத்தில் ஐஐடி கான்பூரில் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது மாணவி இவர்.

ஜனவரி 11ஆம் தேதி மாணவி விகாஸ் குமார் மீனா என்பவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக டிசம்பர்  19ஆம் தேதி முதுகலை ஆய்வாளர் பல்லவி சில்கா என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget