மேலும் அறிய

Crime: குழந்தையை கொன்ற பிறகு உடலுடன் 19 மணி நேரம் காத்திருந்த பெங்களூரு சிஇஓ! கோவா கொலையில் பகீர்!

கோவாவில் 4 வயது குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன

கோவாவை உலுக்கிய கொலை வழக்கு:

 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுசானா சேத், தனது 4 வயது குழந்தையை கொன்றதாக ஜனவரி 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  

சுசானா சேத்தை காவலில் எடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த சேத், கோவா குழந்தைகள் நீதிமன்றத்தில்  நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர், இவரை மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வரும் நிலையில்,  சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மகன் உடலுடன் 19 மணி நேரமாக இருந்த பெண்  சிஇஓ

சுசானா சேத் தனது மகனை ஹோட்டலுக்கு சென்ற 2 மணி நேரத்திலேயே கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சுசானா சேத், டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை 5 நாட்கள் ஹோட்டலில் இருந்துள்ளார்.

பின்னர், ஜனவரி 4ஆம் தேதி பெங்களூரு சென்றுவிட்டு, ஜனவரி 6ஆம் தேதி மாலை கோவா திரும்பியுள்ளார். அதே நாளில், இரவு 11.30 மணிக்கு ஹோட்டலுக்கு சென்ற அவர், இரண்டு மணி நேரத்திலேயே குழந்தையை கொன்றிருக்கிறார். பின்னர், அதே அறையில், குழந்தையின் உடலுடன் கிட்டதட்ட 19 மணி நேரம் இருந்துள்ளதாக" விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், ஜனவரி 7 அன்று பகல் முழுவதும் சுசானா சேத் யாருக்கும் போன் செய்யவோ அல்லது மெசேஜ் செய்யவோ இல்லை. அதே நாளில், இரவு 11:45 மணியளவில், ஹோட்டல் ஊழியரை அழைத்து, தனக்காக ஒரு வண்டியை முன்பதிவு செய்ய கூறியிருக்கிறார். பின்னர், ஹோட்டல் ஊழியரும் கார் புக் செய்து புறப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடந்தது என்ன?

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத். இவர் பெங்களூருவில் ஏஐ நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவரது கணவர் வெங்கட்ராமன். இந்த தம்பதிக்கு கடந்த 2019ல் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், தான் கருத்து வேறுபாடு காரணமாக சுசனா சேத், வெங்கட்ராமன் பிரிந்துள்ளனர். சுசனா கடந்த 2020ல் கணவரை விவாகரத்து செய்ததாக தெரிகிறது. அப்போது, குழந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்க கணவருக்கு கோர்ட் அனுமதி அளித்ததாக தெரிகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தையை பார்க்க கணவர் வந்து செல்வதை சுசானா விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால், குழந்தையுடன் கோவாவிற்கு அழைத்து சென்றிருப்பதாக தெரிகிறது. 

கோவாவில் உள்ள ஹோட்டலில் தங்கிய சுசானா சேத் தனது 4 வயது மகனை கொன்று உடலை பேக்கில் வைத்து வாடகை காரில் பெங்களூரு நோக்கி வந்தபோது போலீசாரால் கைதானார்.  கைதான சுசானா சேத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Iran Warns America: தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினா பதிலுக்கு பேரழிவ ஏற்படுத்துவோம்.! அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் புதிய எச்சரிக்கை
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
Embed widget