மேலும் அறிய

Crime: செல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் பரவிய தீ... உடல் கருகி தீக்கிரையான நபர்

தினமும் தான் தூங்கும்போது செல்போனை சார்ஜ் போடுவதை அர்ஜூன் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், நள்ளிரவில் இவரது செல்போன் சார்ஜர் எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது.

செல்ஃபோன் சார்ஜர் வெடித்து வீடு முழூவதும் தீ பரவி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜுன். பட்டதாரியான அர்ஜுன் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஆக.19) இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தன் தாயின் வீட்டில் விட்டு தன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் அர்ஜூன்.

அப்போது வீட்டில் அவரது மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கிக் கொண்டிருந்ததை அடுத்து அருகே இருந்த தகர வீடு ஒன்றில் அர்ஜூன் தூங்கியுள்ளார். தினமும் தான் தூங்கும்போது செல்போனை சார்ஜ் போடுவதை அர்ஜூன் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், நள்ளிரவில் இவரது செல்போன் சார்ஜர் எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது. தொடர்ந்து தீ குடிசையில் மளமளவெனப் பரவியுள்ளது.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட அர்ஜூன் வீட்டின் உள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவி கஸ்தூரியும், அருகில் இருந்தவர்களும் வருவதற்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீக்கு அர்ஜூன் பரிதாபமாக இரையானார். காவல் துறையினர் முன்னதாக நடத்திய விசாரணையில்  செல்போன் சார்ஜர் வெடித்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் கடந்த ஆண்டு கோவை மாவட்டம், மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம் என்பவர் சார்ஜர் வெடித்து உயிரிழந்த சம்பவம் நடந்தது. 18 வயதான இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர் கடந்த 9ஆம் தேதி இரவு வழக்கம்போல வீட்டில் தனது அறையில் படுக்கையில் இருந்தவாறு செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். பின்னர் செல்போனை சார்ஜ்ஜில் போட்டுவிட்டு தூங்கிவிட்டார்.

மறுநாள் அதிகாலை மின் இணைப்பில் இருந்த செல்போன் திடீரென்று வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட தீ சிவராமின் படுக்கையில் பரவி, அவர் மீதும் பற்றியது. இதில் உடலில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்நிலையில்,  இது போன்ற சம்பவங்கள் நேராமல் இருக்க வழக்கமாக தூங்கச் செல்வதற்கு முன் சார்ஜ் போடாமல் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்

Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget