மேலும் அறிய
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கு- முக்கிய நபர்கள் கைது
நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
![நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கு- முக்கிய நபர்கள் கைது Madurai NTK Murder Naam Tamilar Party executive main persons arrested - TNN நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கு- முக்கிய நபர்கள் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/18/a779c7d47ecde3bf1e695545b9f8f8e61721287999563184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலமுருகன்
Source : whats app
மதுரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலமுருகனை கொலை செய்த வழக்கில் முக்கிய நபர்களான தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலமுருகன் என்ற பாலசுப்பிரமணியன் அமைச்சர் வீட்டு அருகே சாலையில நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சாலையில் பாலமுருகனை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் விரட்டியுள்ளனர்.
ஓட ஓடவிரட்டி கொலை
அப்போது காப்பாற்றுங்கள் எனக்கூறி பாலமுருகன் கூச்சலிட்டபடி ஓடிய நிலையில் மர்ம கும்பலானது திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயத்துடன் கிடந்த பாலமுருகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து படுகாயங்களுடன் வந்த பாலமுருகன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக எடுத்துச் சென்றனர். மதுரையில் அமைச்சரின் வீட்டு அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முக்கிய நபர்கள் கைது
இந்நிலையில், இவ்வழக்கில் மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மகாலிங்கம், அழகு விஜய் (தந்தை, மகன்) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தல்லாகுளம் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகிய 4 பேரை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் 4 பேரும் செல்லூர் ரயில் மேம்பாலத்திலிருந்து நடந்து சென்றதை அறிந்த காவல்துறையினர் பிடிக்க முயற்சித்து உள்ளனர். அப்போது பரத், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகிய 3 பேரும் ரயில் மேம்பாலத்தில் இருந்து குதித்தபோது 3 பேருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. மூவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்: 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் பலி! என்ன நடந்தது?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - எத்தனை சிம்கார்டுகள் வச்சிருக்கீங்க? இனி சிறைதான்! புது சட்டம் கொண்டுவந்த அரசு! விதிகள் இதுதான்!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion