மேலும் அறிய
மதுரையில் 100 நாள் வேலை திட்ட முறைகேடு; தகவல் சொன்னவரை அரிவாளால் வெட்ட முயன்றதால் அதிர்ச்சி
காஞ்சிவனம் என்பவரை வெட்ட முயன்றது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிவாளால் தாக்க முயன்ற அழகுமலை
Source : whats app
மதுரையில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்து புகார் கூறிய நபரை அரிவாளால் வெட்ட முயன்ற அதிர்ச்சி காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறைகேடு நடந்ததாக மாவட்ட தணிக்கை குழு அதிகாரி வாசித்து அறிக்கை தாக்கல்
மதுரை யானைமலை புதுப்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமுதாயத் தணிக்கை 'கிராம சபை கூட்டம்' நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தணிக்கை குழு அதிகாரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா அழகுமலை தலைவராக இருந்த காலகட்டத்தில் முறைகேடு நடந்ததாக மாவட்ட தணிக்கை குழு அதிகாரி வாசித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அரும்பனூர் புதுப்பட்டியைச் சேர்ந்த காஞ்சிவனம் என்பவர் அதிகாரியிடம் முறைகேடுகள் நடந்தை பற்றி விளக்கங்களை கேட்டுள்ளார். மேலும், பல முறைகேடுகள் நடந்ததையும் கூறியுள்ளார். அப்போது அங்குவந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராவின் கணவர் அழகுமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் முடிந்த பின்னர் புகார் கூறிய நபர்களை ஆபாசமாக திட்டியுள்ளனர். மேலும் அழகுமலை பெண்கள் தலையில் வைத்திருந்த கூடையில் இருந்த அரிவாளை எடுத்து ஆபாசமாக திட்டி அருகே நின்ற காஞ்சிவனம் என்பவரை வெட்ட முயன்றது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிவனம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
இதையடுத்து அவரை தடுத்து அரிவாளை அக்கம் பக்கத்தினர் தடுத்து பறித்தனர். இதனையடுத்து காஞ்சிவனம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி அழகுமலை, ஆறுமுகம், மல்கலை, ராஜாமணி, பாலு மற்றும் கணேஷன் ஆகியோர் ஆறு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















