JOB ; விருதுநகர் ITI-யில் வேலை.. தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாரா? - முழு விவரம் இதோ !
மின்சாரப்பணியாளர்கள் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
மின்கம்பி உதவியாளர் தகுதிகாண தேர்வு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண தேர்வு 2025ம் ஆண்டுக்கானது டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், இத்துறையில் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள் மற்றும் தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் இத்துறையில் நடத்தப்பட்ட மின்சாரப்பணியாளர்கள் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், அதற்கான சான்றிதழ், பணியாற்றிய உரிய நிறுவனத்திடம் அல்லது மின் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் இருந்து முன் அனுபவச் சான்று பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. இத்தேர்விற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்புகள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய இணைப்புகளுடன் ரூ.200க்கான தேர்வுக்கட்டணம் செலுத்திய அசல் செலானுடன் உரிய தேர்வு மையத்தினை தேர்வு செய்து அத்தேர்வு மையத்திற்கு 17.10.2025 அன்றைய தேதிக்குள் கிடைக்கும் வகையில் சமர்ப்பிக்கவும். மேலும், விபரங்களுக்கு அலுவலக வேலைநாட்களில் பின்வரும் தொலைபேசி எண்களில் 04562-252655/294382. தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்





















