மதுரையில் பயங்கரம்; வீட்டுவாசலில் முதியவர் கொடூரமாக வெட்டிக்கொலை
கொலை வழக்குப்பதிவு செய்து அண்ணாநகர் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டுவாசலில் முதியவரை கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த கும்பல் - அண்ணாநகர் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல்
மதுரை மாநகர் யாகப்பாநகர் மெயின் வீதியில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் வீடு விற்பனை, நில விற்பனை போன்ற இடைத்தரகர் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென முருகேசனை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது முருகேசன் வலியால் கூச்சலிட்ட நிலையில் அங்கு வந்த அவரது குடும்பத்தினர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசனை, சென்று பார்த்த போது அவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
- அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்
காவல்துறையினர் விசாரணை
இதனையடுத்து கொலை சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினருக்கு முருகேசனின் குடும்பத்தினர் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த, அண்ணா நகர் காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர். இதனையடுத்து முருகேசனின் உடலை மீட்ட காவல்துறையினர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முருகேசன் இடைத்தரகர் பணியின்போது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா? என்ற அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலை பகுதியில் வீட்டு வாசலில் முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து அண்ணாநகர் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?