கரூர்: சொத்துவரி நிர்ணயம் செய்ய லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய செயல் அலுவலர்! எப்படி?
பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவரிடம் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூபாய் 20000 லஞ்சமாக கேட்டுள்ளார். இறுதியாக ரூ.17,500 பணம் தந்தால் சொத்து வரி வழங்குவதாக செயல் அலுவலர் ராஜகோபால் குமரேஷிடம் தெரிவித்துள்ளார்.
குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் சொத்து வரி நிர்ணயம் செய்ய 17,500 லஞ்சம் வாங்கிய செயல் அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் கையும் களவுமாக பிடித்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராஜகோபால். இவர் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவரிடம் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூபாய் 20000 லஞ்சமாக கேட்டுள்ளார். இறுதியாக ரூ.17,500 பணம் தந்தால் சொத்து வரி வழங்குவதாக செயல் அலுவலர் ராஜகோபால் குமரேஷிடம் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேஷ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீசார் ரசாயன பவுடர் தடவிய நோட்டுகளை குமரேஷிடம் செயல் அலுவலரிடம் கொடுக்க சொன்னனர்.
குமரேஷ் செயல் அலுவலர் ராஜகோபாலிடம் பணத்தினை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர் கொடுமையாக இருந்த அலுவலக உதவியாளர் சிவக்குமாரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செயல் அலுவலர் ராஜகோபால் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு பணி மாறுதலாக செல்ல உள்ள நிலையில் சொத்து வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.