‛வேட்டையாடு விளையாடு’ பாணியில் துண்டு துண்டாக இரு பெண் சடலங்கள்... யார் அந்த மாறன்? அமுதன்?
இரண்டு சடலங்களும் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளன. வெளியில் எங்கேயோ கொலை செய்யப்பட்டு, அதன் பின் சடலங்கள் இங்கு வீசப்பட்டுள்ளதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது.
படுகொலைகள் சாதாரணமாகிவிட்ட இந்த சூழலில், பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த கொலை சம்பவம். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா நகர் அரகெரே காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட ஏரி ஒன்றில், காலை கடனை கழிப்பதற்கு வழக்கம் போல சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு பெண சடலம் கரை ஒதுங்கி கிடைந்துள்ளது.
அருகில் சென்று பார்த்த போது, அந்த பெண்ணின் இடுப்புக்கு மேலே எந்த பாகமும் இல்லை. இரண்டாக துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த சடலம் இருந்தது. ஊர் கூடி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் வந்தது.
அதே அரகெரே கிராமத்திற்கு அருகே உள்ள சிடிஎஸ் கால்வாயில் மற்றொரு பெண்ணின் சடலம் இருப்பதை அப்பகுதியினர் கண்டுபிடித்தனர். அந்த சடலமும், இடுப்புக்கு மேலே எந்த பாகமும் இல்லை . இரண்டாக துண்டிக்கப்பட்ட நிலையில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி மட்டுமே அங்கும் இருந்தது. உடனே அது குறித்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
முதல் சம்பவத்தில் மீட்கப்பட்ட பெண் சடலத்தின் வயது, 30 முதல் 35 வயது வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டாவதாக மீட்கப்பட்ட பெண் சடலத்தின் வயது 40 வயது இருக்கும் என்றும் போலீசார் கூறுகின்றனர். அரகெரே போலீசாருக்கு இரட்டை தலை வலியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் அங்க பதட்டமான சூழல் நிலவுகிறது. கொலையான இரு பெண்களும் யார் என்கிற தகவல் தெரியவில்லை. அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிற முதற்கட்ட தகவல் மட்டும் தெரிகிறது.
இரண்டு சடலங்களும் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளன. வெளியில் எங்கேயோ கொலை செய்யப்பட்டு, அதன் பின் சடலங்கள் இங்கு வீசப்பட்டுள்ளதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக உடலின் மேல் பாகத்தை வெட்டி எடுத்து, கீழ் பாகத்தை மட்டும் இவ்வாறு வீசி எறிந்துள்ள மர்ம நபர், உடலின் மேல் பாகத்தை எங்கு மறைத்து வைத்திருக்கிறார் அல்லது வீசியிருக்கிறார் என்பது தெரியாமல் போலீசார் குழம்பி வருகின்றனர் . சடலங்களை அடையாளம் காணாத வரை, இந்த வழக்கில் மேல் விசாரணையை தொடர முடியாது என்பதால், போலீசார் கடுமையான குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்